அரசியல்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க தனித்துப் போட்டியிடும் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாவட்டங்களுக்கு நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் கட்சியின் தொடக்க விழா கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கட்சி அலுவலகத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் திரண்டு இனிப்புகளை வழங்கினார்கள்.இதையொட்டி தே.மு.தி.க. அலுவலகத்தில் கட்சி தொண்டர்களும் திரண்டு இருந்தனர்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும்.போட்டியிட விரும்புவோர் நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.

ALSO READ  உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் கால அவகாசம் தேவை - தமிழக அரசு...!

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.4000, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ரூ.2000 செலுத்தி மனு பெறலாம்.

இந்த நிலையில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வருகிற தேர்தல்களில் நமது பலத்தை காட்டுவோம் என்று நம்பிக்கை தெரிவித்து டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

ALSO READ  அதிரடி மாற்றம்… புத்தாண்டில் வெளியான பரபரப்பு அறிவிப்பு!

தே.மு.தி.க. தொடங்கி 16 ஆண்டுகள் முடிவடைந்து 17-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.தோல்வி என்பது சறுக்கல் தானே தவிர, வீழ்ச்சி அல்ல. எனவே வருகிற உள்ளாட்சி தேர்தலிலும், அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்களிலும் தே.மு.தி.க. பலத்தை நாம் அனைவருக்கும் நிச்சயமாக நிரூபிப்போம்.
இவ்வாறு விஜயகாந்த் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கதிர்வீச்சு மூலம் புற்றுநோயை குணப்படுத்தும் அதிநவீன கருவி : முதல்வர் பழனிசாமி தொடக்கம்

Admin

ரூ.501.69 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி… 110 விதியின் கீழ் அதிரடி!

naveen santhakumar

“MSK” அது எங்க கட்சி இல்லை, ரஜினி மக்கள் மன்றம் விளக்கம் 

News Editor