அரசியல்

“போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்” திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிட்டு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் 6 தேதிசட்ட மன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் ஒரே நாளில் நடக்கவுள்ளதையடுத்து  தமிழக தேர்தல் காலம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் காட்சிகள் தங்களின் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை வெளியீடு என தீவிரம் காட்டிவருகிறது. அந்த வகையில் திமுக நேற்று சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டியலை அறிவித்திருந்தது. 


இந்தநிலையில், தி.மு.க தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட பொதுச் செயலாளர் துரைமுருகன் வாங்கிக்கொண்டார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில்..

  • திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • அமைச்சர்கள் மீதான புகாரை விசாரிக்க தனி நீதிமன்றம்.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண தொகை ரூ.4,000 வழங்கடப்படும். 
  • அரசு வேலையில் பெண்களுக்கு 30 சதவீதத்திலிருந்து 40 ஆக அதிகரிப்பு
  • சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும் .
  • முதியோர் ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.
  • 500 இடங்களில் கலைஞர் உணவகம் திறக்கப்படும்.
  • ஆறுகள் மாசடையாமல் தடுக்க பாதுகாப்பு திட்டம் தொடங்கப்படும்.
  • பணியில் இருக்கும் காவலர் இறந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும்.
  • ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.
  • சென்னை மாநகராட்சியில் லாரி நீர் தவிர்த்து குழாய் மூலம் குடிநீர் விநியோகம்.  
  • பத்திரிக்கையாளர்கள் நலனுக்காக தனி ஆணையம்.
  • சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ, 10,000 மானியம்.
  • மகளிர் மகப்பேறு உதவித் தொகை ரூ.24 ஆயிரமாக அதிகரிக்கப்படும்.
  • ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு உணவு கொடை திட்டம்.
  • 5 ஆண்டுகளில் 50 லட்சம் மாணவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி.
  • கல்வி நிறுவனங்களீல் 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • அரசு பெண் ஊழியர் பேறுகால விடுப்பபு 12 மாதங்களாக அதிகரிப்பு.
  • போக்குவரத்து ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம்.
  • நியாயவிலை கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும்.  
  • 15,000 சிறு வணிகர்களுக்கு வட்டியில்லா கடன்.  
  • இந்து ஆலயங்களில் குடமுழுக்கு கெய்ய ரூ. 1000 கோடி ஒதுக்கப்படும் .
  • பழங்குடியின பட்டியலில் மீனவர் சமுதாயம் .
  • கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்படும்.
ALSO READ  மு.க.ஸ்டாலின் தலைமையிலான 34 அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு !

நடைபாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறப்படும் போன்ற  அறிவிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவரான இரண்டு மனைவிகள்!!!

Admin

மோடி எங்களுடைய பிரதமர் : பாகிஸ்தான் மந்திரிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

Admin

தேர்தல் முடிவுகள்; முன்னிலை வகிக்கும் திமுக…அப்செட்டில் அதிமுக ..!

News Editor