அரசியல் தமிழகம்

ஸ்டாலினுக்கு எதிராக இரண்டு அவதூறு வழக்குகள்- மாநில அரசு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாடு அரசு மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி K.பழனிசாமிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் எதிராக இரண்டு அவதூறு வழக்குகளை தமிழக அரசு தொடர்ந்துள்ளது.

Image result for தமிழகத்தை

முதல்வர் எடப்பாடி சார்பாக நகர அரசு வழக்கறிஞர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

அன்மையில் பேசிய திரு.ஸ்டாலின் தமிழகத்தை மத்திய அரசு எவ்வாறு நல்லாட்சி குறியீட்டில் முதன்மை மாநிலமாக தேர்ந்தெடுத்தது என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் தமிழகத்தை எவ்வாறு “பொதுமக்கள் பாதுகாப்பு” ல் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்க முடிந்தது. இங்கே தான் பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்றுள்ளது எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திலே தான் பல பொதுமக்கள் சுடப்பட்டு இறந்தனர்.

ALSO READ  முதல்வராகும் ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் வாழ்த்து !

எங்கே பொதுமக்களுக்கு பாதுகாப்பு உள்ளது. அதுமட்டுமல்ல இந்த மாநிலம் தான் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களில் இரண்டாமிடத்தில் உள்ளது. இதில் எங்கே யாருக்கு பாதுகாப்பு உள்ளது என சரமாரியாக விமர்சித்தார்.

நேற்றைய (ஜன. 28) முரசொலியில் ஸ்டாலினின் அறிக்கை வெளியாகி உள்ளது.

ALSO READ  இயல்பை விட அதிக மழை - சென்னையில் 77%; தமிழகத்தில் 54% அதிகம்!

ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் CAA க்கு எதிராக “கோலம் போராட்டம்” நடத்திய ஆறு பேர் கைது செய்யப்பட்டது குறித்தும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இது குறித்த செய்தி முரசொலியில் கடந்த டிசம்பர் 30 அன்று பிரசுரமானது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பினராயி விஜயனுடன் செல்ஃபி எடுத்து கொண்ட பிரனவ் நடிகர் ரஜினியுடன் சந்திப்பு

Admin

பலே கில்லாடி…ஒரே மாதத்தில் 2 பெண்களை ஏமாற்றி திருமணம்….

naveen santhakumar

அடேங்கப்பா..!!!! இவ்ளோ சீர் வரிசையா!!! முன்னாள் MLA அசத்தல்….

naveen santhakumar