விளையாட்டு

கடந்த பத்தாண்டுகளின் சிறந்த கேப்டன் தோனி தான்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் சிறந்த கேப்டனாக தோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.2019ஆம் ஆண்டு முடிய இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் கடந்த பத்தாண்டுகளில் கிரிக்கெட்டின் ஒவ்வொரு துறையிலும் சாதித்த வீரர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை ரசிகர்களிடத்தில் எழுப்பியிருந்தது. அதற்கு கொடுக்கப்பட்ட ஆப்ஷன்களில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்நாள் கேப்டன் விராட் கோலி, கேன் வில்லியம்சன் உள்ளிட்ட பலர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த பத்தாண்டில் சர்வதேச அளவில் சிறந்த கேப்டன் தோனிதான் என்பதை ரசிகர்கள் தேர்வுசெய்து உள்ளதாக ஐசிசி கூறியுள்ளது. 2007இல் இந்திய அணிக்கு கேப்டனாக பதவியேற்ற தோனி இந்திய அணிக்கு மூன்று விதமான உலக கோப்பைகள், டெஸ்டில் நம்பர் ஒன் அந்தஸ்து, உள்ளிட்ட பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்தும், 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விக்குப் பின்னர் ஒருநாள் அணிக்கான கேப்டன் பதவியிலிருந்தும் இருந்தும் விலகினார்.

ALSO READ  ஐபிஎல் ஏலம் இன்று ஆரம்பம்- வீரர்கள் இடையே கடும் போட்டி

ஆனால் இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைக்கு பிறகு கடந்த 5 மாதங்களாக தோனி கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறாமல் ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“இந்தியர்களுடன் விளையாடுவது மிகவும் கடினம்” ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கருத்து!

News Editor

இந்தியா – மே.இ.தீவுகள் தொடர் ஐதராபாத்தில் முதல் டி20 போட்டி

Admin

இன்று 2வது ஒருநாள் போட்டி:ஆஸ்திரேலியாவை வீழ்த்த தயாராகும் இந்திய அணி

Admin