தமிழகம்

12ம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது தமிழக அரசு.

Students happy with English paper as Class 12 board exams kick off - Mail  Today News

இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்த செய்த கல்வி வாரியங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்ணை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உதவிட்டது.

இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கும் முறையை தமிழாகி அரசு அறிவித்துள்ளது.

Image
Image

இதன்படி, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு (அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி) 50%, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு (எழுத்துமுறை மதிப்பெண் மட்டும்) 20%, 12ம் வகுப்பு செய்முறை தேர்வு/அக மதிப்பீடு 30% சேர்த்து வழங்கப்பட உள்ளது.

இதன்படி கணக்கிடப்படும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வரும் ஜுலை 31ம் தேதிக்குள் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

மேலும், பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பீட்டு முறை மதிப்பெண்கள் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் விரும்பினால் பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றும், தனித்தேர்வெழுத விண்னப்பித்தவர்களுக்கு கொரோனா தொற்று சீரானதும் தேர்வு நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ALSO READ  மாமூல் கேட்டு மிரட்டிய தி.மு.க. நிர்வாகி- ஸ்டாலின் நடவடிக்கை…!

இதனிடையே, கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் மதிப்பீட்டு முறை இறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தற்போதைய மதிப்பீடு முறை திருப்தி அளிக்கும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றுள்ளவர்கள் மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்ப முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேண்டுகோள்

News Editor

பேரதிர்ச்சி… ஒரே நாளில் இப்படியா?

naveen santhakumar

கொரோனா பணிக்காக 1.25 கோடி நிதியுதவி வழங்கிய  வி.ஐ.டி பல்கலைக்கழகம் !

News Editor