தமிழகம்

2021-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் பட்டியல் வெளியீடு : அம்பேத்கர் சுடர் விருது – மு.க.ஸ்டாலின் பெரியார் ஒளி விருது – வைகோ பெறுகின்றார்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை

தமிழகம் மற்றும் இந்திய அளவில் சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

விருதுகள் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

ALSO READ  தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த மாநில தேர்தல் ஆணையம் முயற்சி
வைகோவின் 10 நாள் நடைபயணத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின் | nakkheeran

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், காசி ஆனந்தன், ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர்களுக்கு இதுவரை விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Thirumavalavan celebrate 57th birthday - MK Stalin wish - Mk stalin- thol  thirumavalavan- political news- political leader- tamil nadu news- national  news | Thandoratimes.com |

இந்நிலையில் 2021-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் பட்டியலை விசிக வெளியிட்டுள்ளது. அதில் அம்பேத்கர் சுடர் – மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர். பெரியார் ஒளி- வைகோ, மதிமுக பொதுச்செயலாளர். காமராசர் கதிர் – நெல்லை கண்ணன். அயோத்திதாசர் ஆதவன்- பி.வி.கரியமால், குடியரசு கட்சி தலைவர். காயிதேமில்லத் பிறை- அல்ஹாஜ் மு.பஷீ்ர் அகமது. செம்மொழி ஞாயிறு – செம்மொழி க.இராமசாமி’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ  தீபாவளியைப் பாதுகாப்புடன் கொண்டாட காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு அறிவுரை
Chennai: Will face case legally, says Thol Thirumavalavan | Chennai News -  Times of India

இந்த விருதுகள் வழங்கும் விழா வரும் டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மிகவும் எளியமுறையில் கொண்டாடப்படும் என விசிக வெளியிட்டுளா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிச்சை எடுத்த பணத்தில் முதியவர் செய்த நம்பமுடியாத செயல்

Admin

தமிழகத்தில் இன்றைக்கும் இவ்வளவு பேருக்கு கொரோனாவா?

naveen santhakumar

சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாக திகழும் அரண்மனைக்காரன் தெரு.

naveen santhakumar