தமிழகம்

பக்தர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி… கிரிவலம் செல்ல தடை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா பரவல் காரணமாக ஜன.17, 18 ஆகிய தினங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதம் பௌர்ணமியின் போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வர். ஆனால் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்த மாதம் பௌர்ணமியின் போது மக்கள் கிரிவலம் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில்: ”1973-ம் ஆண்டு குற்றவியல் நடைமுறை சட்டம் 144-ன் கீழ் தமிநாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 31.01.2022 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. மேலும்ஜன.14 முதல் ஜன.18 வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  கொரோனா நிவாரண நிதி நடிகர் அஜித் 1.25 கோடி....

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பௌர்ணமி தினங்களான ஜன.17 காலை 04.14 மணி முதல் ஜன.18 அதிகாலை 06.00 மணி வரை கிரிவலம் செல்ல பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்தின் நோய் தொற்று பரவலை தடுக்கும் இத்தகைய முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கல்லூரிகளில் சேர ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26 வரை விண்ணப்பிக்கலாம்- அமைச்சர் பொன்முடி பேட்டி

naveen santhakumar

கல்லூரிகள் இந்த கல்வியாண்டு முதல் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்-தமிழக அரசு

naveen santhakumar

மாணவர்களுக்கு ஆய்வக வகுப்புக்களை முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு !

News Editor