தமிழகம்

சம்பள பாக்கி……உணவு கூட வழங்காமல் கட்டி வைத்து சித்திரவதை……பேருந்தை எடுத்து சென்ற ஓட்டுநர்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த டி.வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் (50)கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஈரோடு பெருந்துறையில்,MLA உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கூட்டாக நடத்தும் இன்ப்ராடெக்ஸ் என்ற கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிக்கு சேர்ந்தார். அவருக்கு நான்கு மாத ஊதியம் 46,000 ரூபாய் நிலுவையில் இருந்துள்ளது.

சம்பளத்தை கேட்டதற்கு அந்நிறுவனத்தின் மேலாளர் செல்வகுமார் , இளங்கோவன் , தேவேந்திரன் , பாதுகாப்பு அதிகாரி ஈஸ்வரன் உள்ளிட்டோர் அவரை திட்டி கடுமையாக தாக்கி கட்டிவைத்து உணவு கூட கொடுக்காமல் சித்திரவதை செய்ததாக பரசுராமன் குற்றம் சாட்டியுள்ளார் .

ALSO READ  பள்ளிமாணவர்களுக்கு  தேர்வு எப்போது? செங்கோட்டையன் பதில் !

அதனைத் தொடர்ந்து அவர் பணியில் இருந்த போது பெருந்துறை காவல் நிலையத்திலிருந்து ஆறுமுகம் என்ற சப்-இன்ஸ்பெக்டர் தொலைபேசியில் அழைத்து, ஓட்டுநர் உரிமம், சம்பள பாக்கி தன்னிடம் உள்ளதாகவும், தனியார் நிறுவனத்தினர் பேருந்தை திருடிச் சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர் என்றும் அதனால் பேருந்தை ஒப்படைத்துவிட்டு ஊதியத்தை வாங்கிச் செல்லுமாறு தொலைபேசியில் கூறியுள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த பரசுராமன் விருத்தாச்சலம் நீதிமன்ற வளாகத்தில் பஸ்-ஐ நிறுத்திவிட்டு வழக்கறிஞர் அருள்குமார் முன்பு ஆஜரானார். தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அந்த நிறுவனமும், பெருந்துறை சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகமும் தான் காரணம் என கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் அருள்குமார், பரசுராமனை விருதாச்சலம் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் பரசுராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் கடத்தி வந்த தனியார் நிறுவனத்தின் பஸ் விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

10, 12-ம் வகுப்புகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்களுக்கே அரசுப்பணியில் 20% இட ஒதுக்கீடு..!!!!

naveen santhakumar

நடிகர் விவேக் மரணத்தில் புதிய திருப்பம்! விசாரணைக்கு ஏற்றது தேசிய மனித உரிமை ஆணையம்

naveen santhakumar

விவசாயின் வீடு இடிப்பு; ஒரு வருடமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை !

News Editor