தமிழகம்

எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி – காரணம் என்ன ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamilnadu Elections 2021 CM Today Filed nomination Papers from Edappadi |  தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று எடப்பாடியில் வேட்பு மனு தாக்கல்..!!  | Tamil Nadu News in Tamil

கடந்த ஏப்ரல் மாதம் ஈபிஎஸ் குடலிறக்க பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து உடல்நிலை சரியான நிலையில் அரசியல் களத்திற்கு மீண்டும் திரும்பினார்.

இந்நிலையில், பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று காலை 6.30 மணி அளவில், எம்.ஜி.எம் மருத்துவமனையில் சூட் நம்பர் 11 அறையில் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ  All Pass: அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு- தமிழக அரசு …!

அங்கு அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், பரிசோதனை முடிந்த பிறகு இன்று பிற்பகல் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி

இதனிடையே நேற்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தற்போது பள்ளித் திறப்பு இல்லை….முதல்வர் அறிக்கை….

naveen santhakumar

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் வழக்கு…உயர் நீதிமன்றம் உத்தரவு!

naveen santhakumar

ஊரடங்கு காலத்தில் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு உரிய மருந்து கிடைக்கும்; சுகாதாரத்துறை அறிவிப்பு !

News Editor