தமிழகம்

பிரபலங்கள் நடிகர் அஜித்தை பின்பற்ற வேண்டும் திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

நடிகர் அஜித்தை பின்பற்றி, மற்ற பிரபலங்களும் தங்களது பிரலத்தை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள விளையாட்டுகளுக்கு ஆதரவு தர வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா ட்வீட் செய்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் நடிகர் என்பதையும் தாண்டி மோட்டார் பைக் ரேஸ், கார் ரேஸ், புகைப்படக் கலைஞர், ஏரோ மாடலிங்,  துப்பாக்கி சுடுதல் என பல்வேறு திறமைகள் கொண்டவர். குரோம்பேட்டை மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) கல்லூரி மாணவர்களுக்கான ட்ரோன் வடிவமைப்பு ஆலோசகராகவும் இருந்து வருகிறார். நடிகர் அஜித்குமார் ஆலோசகராக இருந்த எம்ஐடி-ன் தக்ஷா குழுவினரால் வடிவமைக்கப்பட்ட ட்ரோன்கள் கொரோனாவை கட்டுபடுத்த சென்னை மாநகர் முழுவதும் கிருமிநாசினிகள் தெளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 

ALSO READ  முடிந்தால் வாக்கு இயந்திரத்தை ஹேக் செய்து காட்டுங்கள்; கே.என் நேருக்கு பதிலளித்த தேர்தல் அலுவலர் !

இதனை அண்டை மாநிலங்களும் பயன்படுத்தி வருகின்றனர். கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயண் நடிகர் அஜித்குமாரை இந்தத் பாராட்டினார்.

நடுவில் நிற்பவர் அஸ்வத் நாராயண்.

பொதுவாக நடிகர் அஜித்குமார் விளையாட்டுகளின் மீது தீவிர ஆர்வம் உள்ளவர். இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்காக மிகப்பெரிய அளவில் ஸ்போர்ட்ஸ் அகாடெமி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது நடிகர் அஜித்குமாரின் எண்ணம் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித் ஃபார்முலா 1 கார் பந்தய குறித்து எடுக்கப்பட்ட பேட்டியின் போது, எனது பிரபலத்தை பயன்படுத்தி எனது ரசிகர்களிடம் மோட்டார் விளையாட்டுக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளேன். இதன் மூலமாக ரசிகர்கள் விளையாட்டுப் போட்டிகள் குறித்தும் குறிப்பாக கார் பந்தயங்கள், மோட்டார் பைக் பந்தயங்கள் குறித்தும் நிறைய தெரிந்து கொள்வார்கள் என்று கூறியிருந்தார்.

ALSO READ  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் ஓத்துக்கிட்டு !

இந்நிலையில் திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து மற்றவர்களும் தங்கள் பலத்தை பயன்படுத்தி நடிகர் அஜித்தின் விளையாட்டிற்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

டிஆர்பி ராஜா விழிப்புணர்வுக்காக நடிகர் அஜித்தை பயன்படுத்துவது முதல் முறை அல்ல  கடந்த மார்ச் மாதம் ஒரு நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது,

“தல வீட்லயே இருக்காரு. நீங்க ??? வீட்டிலேயே இருங்கள். கொரோனா வரும்முன் காப்போம்” என்று  கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சாதிக்குள் என்னை அடக்க நினைத்தார்கள்; சரத்குமார் குற்றசாட்டு !

News Editor

மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் பரிதாப பலி- டிக்-டாக்கால் விபரீதம்..?

naveen santhakumar

நாளை சூரிய கிரகணம்: தமிழகம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகள்

Admin