தமிழகம்

31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- அனுமதிக்கப்பட்டவை; அனுமதிக்கப்படாதவை எவை.?? 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 3ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. சில நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சி வழியே பேசிய பிரதமர் மோடி, 4ம் கட்ட ஊரடங்கு வித்தியாசமானதாக இருக்கும் என்றார்.

தளர்வுகளை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறி இருந்தார். 3ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், 4ம் கட்டமாக இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு விழுப்புரம் கடலூர் ராணிப்பேட்டை கள்ளக்குறிச்சி திருப்பத்தூர் திருவண்ணாமலை அரியலூர் பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களுக்கு எந்தவித தளர்வும் இல்லை.

கோயம்புத்தூர் சேலம் ஈரோடு திருப்பூர் நாமக்கல் கரூர் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி கன்னியாகுமரி தேனி மதுரை சிவகங்கை விருதுநகர் ராமநாதபுரம் திண்டுக்கல் புதுக்கோட்டை திருச்சிராப்பள்ளி திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் தருமபுரி கிருஷ்ணகிரி வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

எவற்றிற்கெல்லாம் தடை தொடரும்:-

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்கள்.

வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் மதக் கூட்டங்கள்.

திரையரங்குகள் கேளிக்கை கூடங்கள் மதுபானக் கூடங்கள் உடற்பயிற்சி கூடம் கடற்கரை சுற்றுலாத்தலங்கள் அருங்காட்சியகம்  நீச்சல் குளம் விளையாட்டு அரங்கங்கள்.

அனைத்து விதமான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள், விழாக்கள் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

விமானம், ரயில், பேருந்து போக்குவரத்து, மாநிலங்களுக்கிடையேயான ரயில் போக்குவரத்து, சென்னை மாநகரில் இருந்து பிற பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்து ஆகியவற்றிற்கு அனுமதி கிடையாது.

ALSO READ  மைக்செட் தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி !   

மத்திய மாநில அரசின் சிறப்பு அனுமதி பெற்று இயக்கப்படும் விமானம், ரயில் பொது போக்குவரத்து மட்டும் அனுமதி.

டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா, மெட்ரோ ரயில், மின்சார ரயில்.

தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர) தங்கும் ஹோட்டல், ரிசார்ட்கள்.

இறுதி ஊர்வலத்தில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக்கூடாது.

திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.

நீலகிரி கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தளத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை

தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் படி எவ்வித தடங்கலுமின்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.

எவை அனுமதிக்கப்பட்டவை:-

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதியில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி.

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகள் தவிர தமிழ் நாட்டின் மற்ற பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர பிற பகுதியில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு அனுமதி.

 புதிய தளர்வுகள்:-

தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள 25 மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள்.

அந்தந்த மாவட்டத்திற்குள் போக்குவரத்தை இயக்க மட்டும் TN e-Pass இல்லாமல் அனுமதி.

ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு செல்ல TN e-Pass பெற்றுச் செல்லும் போது தற்போதைய நடைமுறையை தொடரும்.

அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிக பட்சமாக 20 நபர்களும், வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற பெரிய கார்களில் மூன்று நபர்களும், சிறிய கார்கள் இரண்டு நபர்களும் வாகன ஓட்டுநர் தவிர செல்ல அனுமதிக்கப்படுவர்.

ALSO READ  நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டுமானங்களுக்கு தண்ணீர், மின் இணைப்பு கிடையாது -தமிழக அரசு..!

மாவட்டத்திற்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் TN e-Pass இல்லாமல் வாடகை மற்றும் டாக்சி வாகனங்களை அத்தியாவசிய பணிகளுக்கான வேளாண்மை வியாபாரம் மருத்துவம் போன்ற பணி நிமித்தமாக பயணம் செய்ய மட்டும் பயன்படுத்த வேண்டும்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தில் தற்போதுள்ள 50 சதவீத பணியாளர்களின் 100 சதவீத பணியாளர்கள் உயர்த்துவதற்கு அனுமதி.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பகுதிகளில் தற்போதுள்ள தளர்வுகளின்படி 50 நபர்களுக்கு குறைவாக பணிபுரிந்து தொழிற்சாலைகளில் 100 சதவீத பணியாளர்களும் 50 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்களுக்கும் அனுமதி.

இதை மேலும் தளர்வு செய்து 100 நபர்களுக்கு குறைவாக பணிபுரியும் தொழிற்சாலை களில் 100 சதவீத பணியாளர்களும் 100 நபர்களுக்கு மேல் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவீத பணியாளர்கள் அல்லது குறைந்தபட்சம் 100 பணியாளர்களுக்கு அனுமதி.

ஊரடங்கு காலத்தில் தற்காலியமாக மூடப் பட்டிருக்கும் தனியார் மற்றும் வியாபார நிறுவனங்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்கு மட்டும் குறைந்த பட்ச பணியாளருடன் இயங்குவதற்கு அனுமதி.

12-ம் வகுப்பு பொது தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு மட்டும் விதிவிலக்கு.

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்குத் அணி பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெறுவது மட்டும் விலக்கு.

இதற்காக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் இடமும் சென்னை மாநகர ஆணையர் இடமும் அனுமதி பெறவேண்டும்.

மாவட்டத்திற்குள் போக்குவரத்து அனுமதிக்கப்படாத 12 மாவட்டங்களில் TN e-Pass உடன் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்றுவர பயன்படுத்தப்படும் டாக்ஸி ஆட்டோவுக்கு மட்டும் விதிவிலக்கு.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆத்தூரில் காவல் ஆய்வாளர் உள்பட 117 பேருக்கு கொரோனா தொற்று !

News Editor

அட!!!!!!….நம்ம ஜூலியா இப்படி பேசுறது……..

naveen santhakumar

மேஜர் சரவணன் நினைவு நாள்; ராணுவ அதிகாரிகள் மரியாதை!

News Editor