தமிழகம்

ஏடிஎம்-ல் பணம் எடுக்க தற்காலிக தடை…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-ல் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதை தொடர்ந்து, டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்-களில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தரமணி, வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் டெபாசிட் ஏடிஎம்-களில் சென்சாரை மறைத்து நூதன முறையில் கொள்ளை கும்பல் ரூ.10 லட்சம் வரை பணத்தை திருடியுள்ளது தெரியவந்துள்ளது.

ALSO READ  ATM-ல் பணமில்லாத வங்கிகளுக்கு அபராதம்.... ரிசர்வ் வங்கி அறிக்கை....

ஏடிஎம்மில் பணத்தை வெளியே தள்ளும் ஷட்டரில் 20 நொடிகள் பணம் எடுக்காவிட்டால் பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும்.

How SBI customers can withdraw money from an ATM without a debit card |  Business Standard News

அதேசமயம் பணம் எடுத்த பிறகும் ஷட்டரை 20 நொடிகள் பிடித்துக்கொண்டால் பணம் உள்ளே சென்றதாக பதிவாகிவிடும். இதை பயன்படுத்தி ஷட்டரை கையில் பிடித்தபடி ஒவ்வொரு முறையும் தலா ரூ.10,000 என எடுத்து ரூ.10 லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.

ALSO READ  நீலகிரி மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் : தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்-ல் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கல் முழிவுக்கு வந்ததும் மீண்டும் இந்த தடை விளக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

துணை முதல்வர் ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி.. 

naveen santhakumar

நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போட தயார்: டெல்லிக்கு கடிதம் எழுதிய தமிழக காவலர்…

Admin

கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு !

News Editor