தமிழகம்

அம்மா உணவகத்தை சேதப்படுத்திய திமுகவினர்; அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

சென்னை தெற்கு மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முகப்பேர் கிழக்கு பகுதியில் 10 BLOCK ல் உள்ள அம்மா உணவகத்தில் திமுகவை சேர்ந்த இருவர் உணவகத்தில் இருந்த பெயர்பலகைகள், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் கிழித்து எரிந்து, அங்கு இருந்த உணவு பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். 

ALSO READ  புதுச்சேரி மாநில வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக !

இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதனை கண்டிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், ”மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழகத் தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பத்மாவதி தாயார் கோவில் கட்ட நன்கொடையாக நிலம் வழங்கியுள்ளார் நடிகை காஞ்சனா:

naveen santhakumar

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு !

News Editor

மீண்டும் காசி மீது கல்லூரி மாணவி ஒருவர் புகார்…..

naveen santhakumar