தமிழகம்

ஊரடங்கு நீட்டிப்பு ..50,100,200 ரூபாய் தொகுப்புகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்  ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஊராடங்கை நீட்டிக்கும் போது அத்தியாவசிய பொருட்களின் தேவை / விநியோகம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா பேசியதாவது, தமிழகம் முழுவதும் தளர்வற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொற்று குறையாமல் உள்ளது.

ALSO READ  கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு !

இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்கும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்கள் மக்களின் வீடுகளுக்கு எவ்வாறு கொண்டு செல்வது /விநியோகம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, சில அரசு அதிகாரிகள் வியாபாரிகளுக்கு இடையூறாக உள்ளார்கள் என முதலமைச்சரிடம் தெரிவித்ததாகவும், அதற்கு நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் கூறியதாக விக்ரம ராஜா தெரிவித்தார்.  

மேலும், முதலமைச்சர் உடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று மாலை 0600 மணிக்கு தமிழகம் முழுவதும் உள்ள வணிகர் சங்க கூட்டமைப்பை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், ஊரடங்கு நீட்டித்தால் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை 50,100,200 ரூபாய் போன்ற தொகுப்பு பைகளாக வழங்கவும் ஆலோசிக்க உள்ளதாக தெரிவித்தார்.

ஊரடங்கு நேரத்திலும் தட்டுப்பாடு இல்லாத விலை ஏற்றம் இல்லாத பொருட்களை மக்களின் வீடுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு உள்ளதாகவும் விக்கிரம ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மே 1,2 தேதிகளில் முழு பொது முடக்கம்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் !

News Editor

கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு

naveen santhakumar

கிருஷ்ணகிரியில் ‘சுவாசம்’ தொண்டு நிறுவனத்தின் சார்பில் இலங்கை அகதிகளுக்கு உதவி…

naveen santhakumar