உலகம் வணிகம்

சிவகாசியில் பல மொழிகளில் 2020 ஆண்டிற்கான தினசரி காலண்டர் தயாரிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சிவகாசியில் பல மொழிகளில் 2020 ஆண்டிற்கான தினசரி காலண்டர் தயாரிப்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பல மொழிகளில் 2020 ஆம் ஆண்டிற்கான தினசரி காலண்டர்கள் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு புத்தாண்டிற்கும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி காலண்டர் பரிசாக பல நிறுவனங்கள் வழங்கி வருகிறது. நகைகடை, ஜவுளிகடை, பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் தினசரி காலண்டர்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்கள்.

தினசரி காலண்டரை பொதுமக்கள் தங்களது வீடுகளில் வைத்துக்கொள்வதால், நிறுவங்களின் விளம்பரம் மக்களிடம் எளிதில் கொண்டு செல்லப்படுகிறது.

எனவே தினசரி காலண்டர்கள் தேவை ஒவ்வொருஆண்டும் கூடிவருகிறது. ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட இந்தியாவில் பேசப்படும் பல மொழிகளில் சிவகாசியில் தினசரி காலண்டர், தயாரிக்கப்பட்டு வருகிறது.

ALSO READ  வியக்கவைக்கும் கிளி மனிதன் இவர் தான்!

இது குறித்து தமிழ்நாடு தினசரி காலண்டர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜெய்சங்கர் கூறியதாவது….. தற்போது தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருவதால், காலண்டர் ஓட்டப்படும் காகித அட்டை சந்தையில் வரத்துக்குறைவாகவே உள்ளது.

எனவே உரிய நேரத்தில் காலண்டா் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டும் காகித விலை உயர்வு, அச்சுக்கூலி உயர்வு, தொழிலாளர்கள் சம்பள உயர்வு காரணமாக காலண்ட ரின் விலை சுமார் 10 முதல் 15 சதம் வரை அதிகரித்துள்ளது.

ALSO READ  ''மேடம், இத நான் உங்க கிட்டச் சொல்லியே ஆகணும். நீங்க அவ்வளவு அழகு''…திரைப்பட பாணியில் நீதிபதியிடம் காதலை தெரிவித்த திருடன்…..

பல மொழிகளில் காலண்டர்கள் அச்சிடப்படுவதால், பல மாநிலங்களுக்கும் காலண்டர் அனுப்படுகிது. காலண்டர் சிலிப்பில், பழமொழிகள், மருத்துவக்குறிப்பு, பொன்மொழிகள் அச்சிடப்படுவதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

சிவகாசியில் தயாராகும் காலண்டா்கள் இந்தியா மட்டுமல்லாது, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார் அவர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெட்ரோல் டேங்கர் தீப்பற்றி வெடித்து சிதறல் :

Shobika

வளமையின் சின்னமாக ஆண் குறி ஓவியம்.. எந்த நாடு தெரியுமா???

naveen santhakumar

மீண்டும் WWE வந்தார் Edge : 90s kidsகள் உற்சாகம்

Admin