உலகம்

சீனாவை வெளுத்து வாங்கும் கனமழை….உயிர் மற்றும் பொருள் சேதம்….!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெய்ஜிங்:

சீனாவில் பெய்து வரும் பலத்த மழையால் பல உயிரிழப்புகளும்.பொருள் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.இதற்கிடையே, ஹெனான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தோடியது.

China floods: People unite on social media to help flood victims - BBC News

இந்தப் பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயா்ந்துள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவித்தது. மழை மற்றும் வெள்ளத்தால் ரூ. 75,000 கோடி அளவுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.மழையை முன்னிட்டு ஹெனான் பகுதியில் வசிக்கும் 3.76 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.மொத்தம் 12.4 லட்சம் பேர் மழை, வெள்ளத்திற்கு பாதிப்படைந்து உள்ளனர். சுரங்க பாதைகள், தெருக்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளன.

ALSO READ  வன்கொடுமைக்கு உள்ளான பெண்களுக்கு அபராதம் விதித்த போலீசார்.. 
சீனாவில் இதுவரை இல்லாத அளவில் மழை பதிவு - பலி எண்ணிக்கை 63 ஆனது

இதனால் பொது போக்குவரத்து பெரிதும் பாதிப்பிற்குள்ளானது.தொடர்ந்து கனமழை இருக்கக் கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணி நடந்து வருகிறது.இந்நிலையில், மழை வெள்ளத்தில் சிக்கி நேற்று வரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை காணவில்லை. 8.52 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 876.6 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 24,474 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளது

News Editor

Cut-Copy-Paste-ன் தந்தை என புகழப்படும் லாரி டெஸ்லர் மறைந்தார்…

naveen santhakumar

KKK முகமூடி அணிந்து வந்த நபரால் பரபரப்பு…

naveen santhakumar