உலகம்

கல்வான் பள்ளத்தாக்கு மோதல்….உயிரிழப்பை ஒப்புக்கொண்ட சீனா….

பீஜிங்:

இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி இரு நாடுகளின் படைகளும் கல்வான் பள்ளத்தாக்கில் கடுமையாக மோதிக்கொண்டன. இதில், இந்தியா தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. 

இந்த மோதலில் சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குறைந்தது 30 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இந்தியா கூறியது.45 சீன வீரர்கள் இறந்திருப்பதாக ரஷியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.ஆனால், உயிரிழப்பு ஏற்பட்டதாக சீனா ஒப்புக்கொள்ளவில்லை.

இந்நிலையில் முதல் முறையாக சீன அரசு உயிரிழப்பை ஒப்புக்கொண்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் சீனா தரப்பில் அதிகாரிகள், வீரர்கள் என மொத்தம் 5 பேர் உயிரிழந்திருப்பதாக சீன ராணுவம் இன்று கூறியுள்ளது.உயிரிழந்ததவர்களுக்கு சீன மத்திய ராணுவ ஆணையம் மரியாதை செலுத்தி கௌரவித்ததாகவும், சீன ராணுவத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான பி.எல்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

வேறு ஆணுடன் காதலியை கண்ட கோபத்தில் கொடூர செயலை செய்த துறவி…

naveen santhakumar

உலக பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான போராட்ட தினம்… 

naveen santhakumar

யார் இந்த சாமுவெல் மோர்ஸ்..???

naveen santhakumar