உலகம்

சவுதி தீவிரம்: வாட்ஸ் அப்பிற்கு மாற்றாக மற்றொரு செயலி உருவாக்கம்……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ரியாத்:

‘வாட்ஸ்ஆப்'(whats app)தகவல்கள் வெளிநாட்டு சர்வர்களில் சேமிக்கப்படுவதால், அதன் பயன்பாட்டை குறைப்பதற்கு சவுதி அரசு உள்நாட்டு செயலியை தயாரித்து வருகிறது. 

மத்திய கிழக்கு நாடுகளில் சமூக ஊடகங்களுக்கு ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் உண்டு. சவுதி, ஓமன், அரபு எமிரேட்ஸ் நாடுகளில் வாட்ஸ்ஆப் மூலம் செய்தி மட்டுமே பகிர முடியும். வீடியோ அழைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே கடந்த சில மாதங்களாக வாட்ஸ்ஆப்பிற்கு மாற்றாக செய்தி அனுப்பும் செயலி ஒன்றை சவுதி அரசு உருவாக்கி வருகிறது. 

ALSO READ  டோக்கியோவில் நாளை தொடக்கம் ! பாராலிம்பிக் போட்டிகள்!

அதன் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது.அந்நாட்டின் தேசிய தகவல் பாதுகாப்பு மைய இயக்குநர் பாசில் அல் ஒமைர் இந்த சோதனை செயலியில் செய்திகளை அனுப்பி ஆய்வு செய்தார்.ஒரு வருடத்திற்குள் இவை பயன்பாட்டுக்கு வரும் என்றார். 

மேலும் இது பற்றி அவர் “பெரும்பாலான வணிக செயலிகளின் சர்வர்கள் வெளிநாடுகளில் சேமிக்கப்பட்டு, அவர்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனை மறைமுகமாக பயன்படுத்தக்கூடும், அதனை கண்டுபிடிப்பது கடினம். அதனால் உள்ளூர் திறமையாளர்களை கொண்டு இச்செயலியை வடிவமைத்துள்ளோம்”.

ALSO READ  வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்…...மறைந்து போகும் மெசேஜ்கள்…..

இதனை மறைமுகமாக யாரும் பயன்படுத்த முடியாது. பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை இதில் உத்தரவாதம் உண்டு.தற்போது அரசு அதிகாரிகள், நிறுவனங்களுக்கு மட்டும்  தான் இது தயாரிக்கப்படுகிறது. 

பிரைவசிக்காக(privacy) வாட்ஸ்ஆப்பை போன்று என்கிரிப்ஷன்(encryption) வழிமுறைகள் பயன்படுத்தப் பட்டு உள்ளது. விண்டோஸ்(Windows) கணினிகளிலும் இதைப் பதிவிறக்கம்(download) செய்து பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வாங்கிய அனைத்து லாட்டரிகளுக்கும் பரிசு மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போன நபர்… 

naveen santhakumar

பாகிஸ்தானில் 14 பேர் மரணம்- பலர் மருத்துவமனைகளில் அனுமதி.

naveen santhakumar

நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்

Admin