உலகம்

ஒருவழியாக ‘எவர்கிவன்’ கப்பலை விடுவித்த சூயஸ் கால்வாய் ஆணையம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கெய்ரோ:

சர்வதேச அளவில் உலகின் மிக முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது சூயஸ் கால்வாய். இந்த கால்வாயில் கடந்த மார்ச் மாதம் ‘எவர்கிவன்’ என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் குறுக்கு பக்கமாக தரை தட்டி நின்றது. இதன் காரணமாக சர்வதேச சரக்கு கப்பல் போக்குவரத்து தடைப்பட்டு, உலக வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட ஒரு வார கால முயற்சிக்கு பிறகு ‘எவர்கிவன்’ கப்பல் மீண்டும் மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டது.

எவர்கிவன்' கப்பலை விடுவித்தது சூயஸ் கால்வாய் ஆணையம் || Tamil News Ever  Given container ship leaves Suez Canal 106 days after getting stuck

இருப்பினும் கப்பல் தரை தட்டி நின்ற காரணத்தினால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை வழங்கும் வரை கப்பலை விடமாட்டோம் என ‘எவர்கிவன்’ கப்பலின் உரிமையாளரான ஜப்பானை சேர்ந்த ஷோய் கிசென் கைஷாவிடம் சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவித்தது.அதற்காக ‘எவர்கிவன்’ கப்பலை சூயஸ் கால்வாய் அருகே உள்ள ஒரு ஏரியில் பிணையாக பிடித்து வைக்கப்பட்டது. சுமார் 916 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்டது. எனினும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இழப்பீட்டு தொகையை 550 மில்லியன் அமெரிக்க டாலர் வரை சூயஸ் கால்வாய் ஆணையம் குறைத்து கொண்டது.

ALSO READ  இன்று உலகப் பெருங்கடல்கள் தினம்...
100 நாட்களுக்குப் பின் எவர்கிவன் கப்பலை விடுவித்தது சூயஸ் கால்வாய் ஆணையம்

இந்நிலையில் சூயஸ் கால்வாய் ஆணையம் கேட்ட இழப்பீட்டு தொகையை வழங்க ‘எவர்கிவன்’ கப்பலின் உரிமையாளர் ஷோய் கிசென் கைஷா ஒப்பு கொண்டார். இது தொடர்பான ஒப்பந்தத்திலும் அவர் கையெழுத்திட்டார்.இதனை தொடர்ந்து, 3 மாதங்களுக்குப் பிறகு ‘எவர்கிவன்’ கப்பலை சூயஸ் கால்வாய் ஆணையம் நேற்று விடுவித்தது. இதையடுத்து அந்த கப்பல் நெதர்லாந்து நோக்கிய தனது பயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியர்களுக்கு தடையா????..மலேசியா…..

naveen santhakumar

சீன நாட்டவர்களுக்கு ஹோட்டலில் உணவு கிடையாதா ?

Admin

அமெரிக்க மாணவி ரஷ்யாவில் மர்ம மரணம்…!

naveen santhakumar