உலகம்

தொடரும் தலிபான்கள் கொடுமை – ஆண்கள் தாடியை வெட்டக்கூடாது தாலிபான்கள் உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காபூல்:-

ஆப்கானிஸ்தானில் ஆண்களின் தாடியை மழிக்கவோ அல்லது ட்ரிம் செய்யவோ கூடாது என்று முடி திருத்துவோருக்குத் தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என முதலில் தெரிவித்த நிலையில் பெண்கள் வேலைக்குச் செல்லக் கட்டுப்பாடு விதித்தனர்.

மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகளைத் திறந்த தலிபான்கள், மாணவிகள் குறித்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. உயர்கல்விக் கூடங்களில் மாணவிகள், மாணவர்களுக்கு தனித்தனி வகுப்பறையும், இருதரப்பும் பார்க்காத வகையில் திரையிடப்பட்டுள்ளது. மீண்டும் கடந்த 1996-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சி வருமோ என மக்கள் அஞ்சுகின்றனர். ஆனால் அது நிச்சயம் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மாண்ட் மாகாணத்தில் தாடி வைத்திருக்கும் ஆண்கள் இனி அதனை வெட்டவோ, திருத்தவோ கூடாது என்று ஆணை பிறப்பித்தனர். மேலும், ஆண்கள் தாடியை மழிக்கவோ அல்லது தாடியை ட்ரிம் செய்யவோ கூடாது என்று சலூன் கடைக்காரர்களுக்கும் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ALSO READ  ஆப்கன்: தலிபான்கள் தாக்குதலில் 'புலிட்சர்' விருது பெற்ற இந்திய புகைப்பட செய்தியாளர் உயிரிழப்பு ..!

தாலிபான்களின் இந்த லூசுத்தனமான உத்தரவால் தங்களது தொழில் மற்றும் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முடிதிருத்தும் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

The Taliban has banned shaving of beards in Afghanistan's Earth province

மேலும், சலூன்களில் மேற்கத்தியப் பாடல்கள், மேற்கத்திய இசை போன்றவற்றையும் ஒலிக்கவிடக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

ALSO READ  கொரோனாவால் பரிதாபமாக உயிரிழந்த இரட்டை சகோதரி நர்சுகள்...

தலிபான்கள் ஆட்சியில் எப்போதும் போல் ஏராளமான மனித உரிமைகள் நடந்துவருவதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஐ.நா., யுனெஸ்கோ போன்றவை என்னதான் கண்டித்தால் அவற்றை தலிபான்கள் பொருட்படுத்துவதே இல்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவருக்கு கொரோனாவா????

naveen santhakumar

விமானத்தின் மீது நாணயங்களை வீசிய சீனப்பயணி

Admin

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு?

Shanthi