உலகம்

தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தேர்வு ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக தலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உள்பட முக்கியப் பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றியதோடு தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் உருஸ்கன் மாகாணத்தில் 1968 ஆம் ஆண்டு முல்லா அப்துல் கனி பரதர் பிறந்தார். அங்கிருந்த சோவியத் யூனியன் ஆட்சிக்கு எதிராக ஆப்கன் முஜாகிதீன் அமைப்புடன் இணைந்து சண்டையிட்டவர் தான் முல்லா அப்துல் கனி பரதர்.

ALSO READ  சோனு சூட் உதவியால் இந்தியா திரும்பும் தமிழக மாணவர்கள்… 
Taliban leader Mullah Abdul Ghani Baradar likely to become Afghanistan's  new president

அதுபோன்று கடந்த ஜூலை மாதம் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ -யுடனான சந்திப்பை தலைமை ஏற்று நடத்தியவர் முல்லா அப்துல் கனி.

கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க அரசுடன் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் முதன்மை பங்கு வகித்தவர் முல்லா அப்துல் கனி பரதர்.

ALSO READ  பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரி்க்கா பயணம்...!!

இந்த நிலையில் தலிபான்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியா மற்றும் இலங்கை ராணுவங்கள் இணைந்து இலங்கையில் பயிற்சி

News Editor

வண்ணமயமாக..கோலாகலமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக் :

Shobika

ரஷ்யாவின் ஏரி பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து :

Shobika