உலகம்

பிரபலமடைந்த ஒரு மாதத்திற்குள் பிரச்சினைகளை சந்திக்கும் ZOOM App….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸூம் ஆப் (Zoom App) இப்படி ஒரு ஆப் இருக்கு அது பலருக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இன்று உலக அளவில் ட்ரெண்டிங்ல் இருக்கிற ஒரு மொபைல் செயலி என்றால் அது Zoom என்கிற இந்த வீடியோ காலிங் ஆப் தான். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த மொபைல் செயலி பயன்பாடு கிட்டத்தட்ட 535 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். பெரும்பான்மையான மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்து (Work From Home) வருகிறார்கள். தற்போது வெளியில் செல்லவும் நண்பர்களை காணவோ முடியாமல் தவித்து வருகிறார்கள்.  அதற்கு தீர்வாக இந்த செயலி உள்ளது இந்தியாவில் வாட்ஸ் அப் மற்றும் டிக் டாக்-ஐ தாண்டியுள்ளது இது ஸூம் செயலி.

எந்த நாடு கொரோனா வைரஸை உலக நாடுகளுக்கு கொடுத்ததோ அதே நாடு தான் இந்த Zoom செயலியையும் கொடுத்துள்ளது. இந்த மொபைல் செயலி தற்பொழுது மிகப் பிரபலமாக இருக்கிறது என்றாலும் இந்த செயலியை கடந்த 2011-ம் ஆண்டே உருவாக்கப்பட்டது.

ALSO READ  அமெரிக்காவில் சிங்கம், புலி, சிறுத்தை, பூனைகள் என வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகளுக்கும் கொரானா....

சிஸ்கோ (CISCO) நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் எரிக் யுவான் (Eric Yuan) என்பவர் இந்த செயலியை சிஸ்கோ நிறுவனத்தில் தன்னுடன் பணியாற்றிய 40 பொறியாளர்களுடன் இணைந்து உருவாக்கினார். 

தற்போதைக்கு உள்ள மொபைல் செயலிகளில் 10 பேருக்கு மேல் வீடியோ காலிங் கில் இணையும் வசதி உள்ள ஒரே செயலி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது செயலில் கிட்டத்தட்ட 50 பேர் வரை ஒரே நேரத்தில் வீடியோ காலில் இணைய முடியும்  

ஆனால் இதே செயலை தற்பொழுது பிரச்சனையையும் சந்தித்து வருகிறது இந்த செயலியில் தனிநபர்களின் தகவல்கள் திருடப்படும் தனிநபர் உரிமைக்கு எந்தவித உத்தரவாதம் இல்லை என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அமெரிக்காவின் நியூயார்க் நகர அட்டர்னி ஜெனரல் லெடிடியா ஜேம்ஸ் (Letitia James) நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ALSO READ  இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தீபாவளி பிரார்த்தனை!

இந்த செயலி மூலமாக பல்வேறு மால்வேர்கள் கணினிகளை தாக்குவதாகவும் தெரியவந்துள்ளது.  மேலும், அமெரிக்காவின் புலனாய் நிறுவனமான FBI இந்த செயலியை பயன்படுத்துவதன் மூலமாக வீடியோக்கள் திருடப்படுகிறது என்று கூறி உள்ளது மேலும் இந்த செயலியை Zoom-Bombing என்று கூறியுள்ளது.

இதனிடையே இந்த செயலியின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான எரிக் யுவான் தங்கள் தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளார் இதுதொடர்பாக விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

இந்த செயலியை உலகின் பல முன்னணி தலைவர்கள் மற்றும் முன்னணி பிரபலங்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க முன்னாள் மத்திய வங்கி தலைவர் ஆலன் கிரீன்ஸ்ஸ்பேன் (Alan Greenspan) கூட இந்த செயலியை பயன்படுத்தி வருவது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா – இனி ஊசி வேண்டாம்: மாத்திரைக்கு போதும் !

naveen santhakumar

அண்டார்டிகாவில் எங்கும் ரத்த பனி-இந்த விசித்திர நிகழ்வுக்கான காரணம் என்ன.???

naveen santhakumar

நாயின் வயிற்றில் இருந்த மர்ம பொருள்… மருத்துவர்கள் அதிர்ச்சி

Admin