இந்தியா

ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்ட தந்தை, மகன்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜார்க்கண்ட்:-

ஜார்க்கண்ட் இந்தியாவில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்று இங்கு வசிக்கும் பழங்குடியினர் பலர் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்

ஜார்கண்டில் கும்பலா மாவட்டத்தின் காஹ்ரா பகுதியை சேர்ந்தவர் ராம்லால் முண்டா ஷகோடரி முண்டா. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே 30 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர்.

இவர்களுடைய மகன் ஜித்தேஸ்வர் முண்டா இவரும் அருணா முண்டா என்ற பெண்ணோடு கடந்த இரண்டு வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், இது போன்ற பலர் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்வது NIMITTA என்ற தொண்டு நிறுவனத்துக்கு தெரியவந்தது

ALSO READ  மோடி எங்களுடைய பிரதமர் : பாகிஸ்தான் மந்திரிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

இதையடுத்து இந்த தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டின் படி தந்தை மகன் இருவரும் ஒரே மேடையில் தங்கள் மனைவிகளை தற்போது திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து என்ற தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் நிகிதா சின்ஹா கூறுகையில்:-

ALSO READ  ஜார்க்கண்ட் புதிய கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் பலர் மிகவும் வறுமை நிலையில் வாழ்கின்றனர். இவர்களால் தங்கள் திருமணத்திற்கு கூட செலவு செய்ய வழி இல்லாத நிலையில் உள்ளனர்.

ஆதனால் பெரும்பாலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஜோடிகள் வசித்து வருகின்றனர்.

எனவே இதுபோன்று வாழ்பவர்கள் சமூக அங்கீகாரம் பெறும் வகையில் நாங்கள் திருமணத்தை நடத்தி வைக்கிறேன் என்றார். குறிப்பாக சம்பந்தபட்ட பெண்ணும் அவளது குழந்தையும் சமூக அங்கீகாரம் பெற வழி செய்கிறோம் என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல்?

Shanthi

டெல்லி வன்முறை குறித்து அமித்ஷா அவசர ஆலோசனை !

News Editor

முடிவுக்கு வந்தது துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் புளூ டிக் சர்ச்சை…! 

naveen santhakumar