ஜோதிடம்

கொரோனா பாதிப்பால் மதுபானங்களை வீட்டிற்கு டெலிவரி செய்ய அரசு முடிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஷில்லாங்:-

மேகாலயா அரசாங்கம் வீட்டுக்கே சென்று மது வினியோகம் (Home Delivery) செய்ய முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நலனை கருத்தில் கொண்டு அத்தியாவசியமாக தேவைப்படும் நபர்களுக்கு மது விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதனை ஒரு தற்காலிக ஏற்பாடாக பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் பரிந்துரையினை பெற்றவரோரின் வீடுகளுக்கே சென்று மது விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ  பூதாகரமாக வெடிக்கும் லட்சத்தீவு விவகாரம்; முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றியது கேரளா 

அதேபோல் மது கிடங்குகளும் நேரடியாக மருத்துவரின் பரிந்துரை உள்ளவர்களுக்கு விற்பனை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஆனால், மருத்துவரின் பரிந்துரை இல்லாத எந்த நபருக்கும் கட்டாயம் மது விற்பனை செய்ய கூடாது என்று கலால் துறை துணைச் செயலாளர்  B சைய்ம்லே (B Syiemlieh) தெரிவித்துள்ளார். 

ALSO READ  செய்தி வாசிப்பாளர் உடையை வைத்து கிம் ஜோங் உன் உயிருடன் இருக்கிறாரா என தெரிந்து கொள்ளலாம்.. ஆச்சரிய தகவல்....

இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனும் முன்னரே இதேபோன்று மருத்துவரின் பரிந்துரை பேரில் வருபவர்களுக்கு மது விற்பனை செய்யலாம் என்று கூறியிருந்தார்.

ஆனால் தங்களால் அதுபோன்று மதுவிற்காக மருத்துவ பரிந்துரைகள் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2020 ஆம் ஆண்டு தனுசு ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

Admin

ஊரடங்கு: 150 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற 12 வயது சிறுமி மரணம்…

naveen santhakumar

சொல்லின் செல்வர் சோ.சத்தியசீலன் காலமானார்..!

naveen santhakumar