தமிழகம்

பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி- தமிழக அரசு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தமிழகத்தில், சென்னைகாவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளை தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

போக்குவரத்திற்காக தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது:-

1- கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் மண்டலம், 

2- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மண்டலம், 

3- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மண்டலம், 

4- நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மண்டலம், 

ALSO READ  தைப்பூசத்திற்கு இனி பொது விடுமுறை : முதல்வர் உத்தரவு  

5- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மண்டலம், 

6- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மண்டலம்,  

7- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மண்டலம், 

8- சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதி  மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. 

இதில் மண்டலம்  7 காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மண்டலம் 8 சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகள் தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என  தமிழக அரசு கூறியுள்ளது.

ALSO READ  பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு..!

அனைத்து வகையான வாகனங்களும் மண்டலத்திற்குள் இயங்க அனுமதி பாஸ் தேவையில்லை. அதேபோல பொது போக்குவரத்தில் பயணிக்கவும் தேவையில்லை.

அதேசமயம் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் வரவும் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்கள் செல்லவும் மண்டலங்களுக்கு இடையே சென்று வரவும் இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் கால அவகாசம் தேவை – தமிழக அரசு…!

News Editor

சிவசங்கர் பாபாவை கைது செய்ய டேராடூன் விரைந்தது சிபிசிஐடி…!

naveen santhakumar

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!

News Editor