உலகம்

என்னது! சீன அதிபர் Xi Jinping இல்ல Kim Jong Un-னா பா.ஜ.க. தொண்டர்கள் செய்த அட்ராசிட்டி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொல்கத்தா:-

ஏதாவது ஒரு விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கட்சி உறுப்பினர்கள் செய்யும் செயல்பாடுகள் வலைதளங்களில் வைரல் ஆகி கிண்டலாகும். இதில் குறிப்பாக பிஜேபி தொண்டர்கள் செய்யும் செயல்கள் தேசிய அளவில் வைரலாகும். அவர்கள் அவ்வப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில் செய்யும் போராட்டம் நகைச்சுவையில் முடியும். 

லடாக் கல்வான் பள்ளத்தாக்கு சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீனாவுடனான மோதலில் பலியானதையடுத்து மேற்கு வங்க பாஜக தொண்டர்கள் சிலர் சீனாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறேன் என்ற  பெயரில் சீன அதிபரின் உருவ பொம்மையை எரித்தனர். ஆனால் கடைசியில் சீன அதிபர் யார் என்ற குழப்பம் ஏற்பட்டு வடகொரிய அதிபர் கிம் உருவ பொம்மையை எரித்தனர். 

ALSO READ  அடடே…!!!! இந்த ஐடியா கூட நல்லாதான் இருக்கு….கல்வி கட்டணத்திற்கு பதில் தேங்காய்…..

மேற்கு வங்கத்தில் அசன்சல் பகுதியில் பாஜக தொண்டர்கள் சிலர் ‘சீனாவைப் புறக்கணிப்போம்’ என்று கோஷமிட்டுக்கொண்டே வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உருவபொம்மையை எரித்தனர். இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பாஜகவை கடுமையாகக் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

இதில் உச்சபட்ச நகைச்சுவை என்னவென்றால் “சீன பிரதமர் கிம் ஜோங் உன் உருவபொம்மையை எரிக்கிறோம்” என்று கூறிக்கொண்டே உருவ பொம்மையை எரித்தனர். சீன அதிபர் ஜின்பிங் என்பது கூட தெரியாமல் கூறியது மட்டுமல்ல அதிபருக்கும் பிரதமருக்கும் உள்ள வேறுபாடும் தெரியாமலும் அறியாமையில் பாஜக தொண்டர்களின் செயல் குறித்து நெட்டிசன்கள் கடும் கிண்டலில் இறங்கியுள்ளனர்.

ALSO READ  20 நாட்களுக்குப் பின் முதல்முறையாக பொதுநிகழ்ச்சியில் பங்கேற்றார் வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன்....


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்பட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது

News Editor

பதிவியேற்பு விழாவிற்கு டிரம்புக்கு அழைப்பு விடுக்கும் ஜோ பிடன் :

naveen santhakumar

காபூல் விமான நிலையம் அருகே மீண்டும் இரட்டை குண்டு வெடிப்பு: ஏராளமானோர் உயிரிழப்பு?

naveen santhakumar