உலகம்

ஆரஞ்சு பழ அளவில் சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கிரகம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கிரகம் ஆரஞ்சு பழ (Grapefruit) அளவில் உள்ள கருந்துளை (Blackhole) என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

GrapeFruit.

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்தில் ஒன்பதாவதாக நிபிரு (Nibiru) என்ற கிரகம் இருப்பதாக கூறினார்கள்.

இந்நிலையில் அந்த கிரகம் ஆரம்பகாலத்தில் கருந்துளையாக (Premordial Blackhole) இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பூமியில் நிறையில் ஐந்து முதல் பத்து மடங்கு உள்ளதாக கூறப்படும் இந்த கிரகம் ஒரு ஆரஞ்சுப் பழத்தின் அளவே இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள்.

ALSO READ  இவாங்கா டிரம்ப்புக்கு கொரானாவா?? வெள்ளை மாளிகை விளக்கம்...

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் (Harvard University) சேர்ந்த இரு வானிலை ஆய்வாளர்கள் (Astrophysicists) இந்த கருத்தை தெரிவித்துள்ளார். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் அறிவியல் துறை பேராசிரியர் டாக்டர் ஏவி லோய்ப் (Dr. Avi Loeb), ஜூனியர் பேராசிரியர் பிரான்க் பெய்ர்ட் (Frank B. Baird Jr. Professor of Science at Harvard) ஆகியோர் இந்த ஆய்வை செய்துள்ளனர். இந்த ஆய்வில் அமீர் சிராஜ் (Amir Siraj) என்ற இளங்கலை  மாணவரும் இடம்பெற்றுள்ளார்.

இந்தக் கருந்துளை அல்லது பிக் பேங்க் (Big Bang) எனப்படும் பெரு வெடிப்பு ஏற்பட்ட சில நொடிகளுக்குப் பின்னர் உருவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மேற்கண்டவை அனைத்தும் இந்த வானியல் ஆய்வாளர்களின் அனுமானங்களே ஆகும் இது குறித்த ஆய்வுகள் இன்னும் முழுமை அடையவில்லை.

ALSO READ  2022-ம் ஆண்டு வரை சமூக விலகலை கடைபிடிக்க வேண்டி வரும்... 2025ம் ஆண்டு மீண்டும் கொரோனா வைரஸ் வரும் ... ஹார்வர்டு பல்கலைகழகம்...

இது தொடர்பாக பேராசிரியர் லோய்ப் கூறுகையில்:-

அண்டவெளியில் ஒன்பதாவது கிரகத்தை தேடுவது என்பது நமது உறவினரை  நமக்கே தெரியாத நம் வீட்டு பின்புறத்தில் உள்ள ஷெட்டில் தேடுவதற்கு சமம் ஆகும் என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸால் கையுறைகள் மற்றும் முக கவசங்களுக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்படவில்லை.. இதற்கும் கடும் தட்டுப்பாடு….

naveen santhakumar

இந்தியாவின் மூவர்ணக் கொடியை தனது நாட்டிலுள்ள மலைச்சிகரத்தில் ஒளிரச் செய்த ஸ்விட்சர்லாந்து…காரணம் என்ன தெரியுமா???

naveen santhakumar

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு …..

naveen santhakumar