உலகம்

45 ஆண்டு கழித்து கடலில் தரையிறங்கும் ராக்கெட்!…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கலிஃபோர்னியா:-

எலான் மஸ்க்கின் “ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனம் தயாரித்த ராக்கெட்டில் (Dragon Capsule) டாக் ஹார்லி (Doug Hurley), பாப் பெஹ்னன் (Bob Behnken) என்ற இரு அமெரிக்க விண்வெளி வீரர்கள், கடந்த மே 30-ம் தேதி நாசா சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். இந்நிலையில் தங்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று(ஆக 02) பூமிக்கு புறப்பட்டனர்.

இவர்கள் இருவரும் இன்று பிற்பகல் மெக்சிக்கோ வளைகுடாவில் உள்ள கடலில் தங்களின் ராக்கெட்(கேப்சூல்) தரையிறங்கியது.

முதலில் ப்ளோரிடா கடலில்தான் கேப்சூல் லேண்டிங் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அங்கு தற்போது புயல்சின்னம் உருவாகி இருப்பதால், பென்சகோலா பகுதியில் தரையிறக்கப்படுகிறது. கடந்த 45 ஆண்டுகளுக்குப்பின் கடலில் விண்வெளி ராக்கெட்டை தரையிறக்குவது இதுதான் முதல்முறையாகும். 

இந்த கேப்சூல் எப்படி செயல்படும்:-

ALSO READ  முடிவுக்கு வருகிறது தலிபான் ஆட்சி - ஜார்ஜ் புஷ் வீடியோ வைரல்

சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து கிளம்பும் ராக்கெட்டில் இருந்து இந்த கேப்சூல் வெளியேற்றப்படும். அதன் பிறகு அந்த கேப்ஸ்யூல் உடன் இணைக்கப்பட்டுள்ள அடிப்பகுதி (Trunk) தனியே கழண்டுவிடும். இது பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது ஏற்படும் உராய்வால் எரிந்து சாம்பலாகிவிடும். பின்னர் கேப்சூல் மட்டும் பூமிக்குள் நுழையும். இதன்பிறகு கடற்பகுதியில் தரை இறங்குவதற்கு முன்பாக கேப்ஸ்யூலின் பாராசூட்டுகள் விரியும், அடுத்து கடல் பகுதியில் குறிக்கப்பட்டுள்ள பகுதியில் பத்திரமாக தரை இறங்கும்.

அதன்பிறகு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் படகுகள் சென்று விண்வெளி வீரர்களை அழைத்து திரும்பும். அதோடு படகுகள் கேப்சூலையும் ஏற்றிக் கொண்டு திரும்பும். கேப்சூல் அருகே செல்லும் படகுகள் கேப்சூலில் இருந்து வெளியேற்றப்படும் வேதியல் பொருட்களை பத்திரமாக கடல் பரப்பிலிருந்து அகற்றும். கேப்சூலில் இருந்து நைட்ரஜன் டெட்ராக்சைடு (Nitrogen Tetraoxide) வெளியேறும்.

ALSO READ  நாசா அதிரடி போட்டி அறிவிப்பு - பரிசு வெல்ல நீங்கள் ரெடியா..???

இதற்கு முன் கடந்த 1975-ம் ஆண்டு அமெரி்க்கா சோவியத் கூட்டமைப்பில் அப்போலோ-சூயஸ் ராக்கெட் கடலில் தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

courtesy.

இதனிடையே கடற்கரைப் பகுதியில் தனியார் படகுகள் இயக்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த கட்டுப்பாடுகளை மீறி கேப்சூல் தரை இறங்கியபோது ட்ரம்புக்காக பிரச்சாரம் செய்யும் படகு ஒன்று ட்ரம்ப் ஆதரவு கொடியுடன் கேப்சூல் கடலின் தரை இறங்கிய பகுதிக்கு மிக அருகில் சென்றது.

கேப்சூல் விளக்கப்படம்:-


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உலகளவில் தொடர்ந்து உயரும் கொரோனா பாதிப்பு !

News Editor

துருக்கியில் எச்சில் துப்பிய பீட்சாவை டெலிவரி செய்த நபர்

Admin

சவுதியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு :

naveen santhakumar