தமிழகம்

கூடிய விரைவில்….சூடான…சுவையான….. மோடி இட்லி வித் சாம்பார்…….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோடி இட்லி என்ற பெயரில் விளம்பர அறிவிப்புகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

சேலம் நகர் வீதி, சின்னக்கடை வீதி, பழைய பேருந்து நிலையம், புதுப்பேருந்து நிலையம், அம்மாப்பேட்டை, சூரமங்கலம், மற்றும் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடி பெயரில் இட்லிக்கான விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

பாஜகவின் பிரச்சார அணி மாநில துணைத்தலைவர் மகேஷ் பெயரை மேலே அச்சிட்டு, ரூ. 10க்கு நான்கு இட்லிகள் அதுவும் சாம்பாருடன் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ALSO READ  பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை ! 

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக நீக்கப்பட்ட பிறகு சேலம் செல்லும் நபர்களுக்கு எல்லாம் மோடி இட்லி தான் ஃபேவரைட் இடமாக இருக்கும் எனலாம்.

ஆரோக்கியமானது, சுகாதாரமானது, சுவையானது, தரமானது மற்றும் அதிநவீன கருவிகள் கொண்டு உருவாக்கப்படுகிறது என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த கடை திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு !

News Editor

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட நடிகர் கைது….

naveen santhakumar

‘பாஸ்டேக்’ மூலம் சுங்க கட்டண வசூல் இரண்டு வாரங்களில் 52 கோடி

Admin