இந்தியா

டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல, பயங்கரவாதிகள்; மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  பாலிவுட் நடிகை “கங்கனா ரனாவத்” தொடக்கம் முதலே இப்போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.   விவசாயிகள் போராட்டம் குறித்து ஜக்கி வாசுதேவ் பேசும் வீடியோ ஒன்றை குறிப்பிட்டு  சமீபத்தில் அவர் சமூகவலைத்தள பக்கத்தில்  பகிர்ந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ALSO READ  பின்லாந்து நாட்டிற்கான இந்திய தூதராக ரவீஷ்குமார் நியமனம்..

போராட்டத்தில் பங்கேற்ற 80 வயதில் ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் கங்கனா ரணாவத். போராட்டத்திற்கு மூதாட்டி 100 ரூபாய் கொடுத்து அழைத்து வந்துள்ளதாகவும் அவர் ஷாகின்பாக் போராட்டக்காரர் என்று கடுமையாக சாடினார். அந்த கருத்து சர்ச்சையான நிலையில்  கங்கனா  மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனையடுத்து அந்தத்  பதிவை கங்கனா நீக்கினார். 

american singer rihanna

அதனையடுத்து அண்மையில் அமெரிக்க பாடகி ரிஹானா ‘நாம் ஏன் விவசாயிகள் போராட்டம் பற்றி பேசுவதில்லை’ என ட்விட்டரில் பதிவிட்டுருந்தார்.

ALSO READ  இலங்கை சுற்றுப் பயணத்தில் ராகுல் டிராவிட்; உற்சாகத்தில் ரசிகர்கள் !

இந்நிலையில் அந்த பதிவிற்கு பதிலளித்துள்ள கங்கனா ரணாவத் “டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல. இந்தியாவைத் துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகள். துண்டாடப்பட்ட நாட்டை சீனா கைப்பற்றி, அமெரிக்காவைப் போல் சீன பகுதியாக மாற்ற முயற்சிக்கும். உங்களைப் போல் நாங்கள் நாட்டை விற்க மாட்டோம்” என பதில் அளித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சச்சினுக்கு எக்ஸ் பிரிவு பாதுகாப்பு நீக்கம்

Admin

Mostbet Indian: Official Site, Enrollment, Bonus 25000 Logi

Shobika

ஏழை மக்களுக்கு உதவுவதற்காக 6.2 லட்சம் நிதி திரட்டிய 11 வயது சிறுமி…. துணை குடியரசுத் தலைவர் பாராட்டு…..

naveen santhakumar