அரசியல்

70 கோடி ரூபாய் இருந்தால் தேர்தலில் சீட்; திராவிட காட்சிகள் மீது சரத்குமார் குற்றச்சாட்டு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது.  சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகி மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயக கட்சி, சமத்துவ மக்கள் காட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளது.

ALSO READ  அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் அதிபர் டிரம்ப் குறித்துஅதிர வைக்கும் தகவல்கள்

இந்நிலையில் கோவையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடக் கட்சிகளின் ஆட்சி இருந்து இருந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, அதனால் இந்த முறை மாற்றம் வேண்டும் என்றார். 

 தொடர்ந்து பேசிய அவர் 70 கோடி ரூபாய் செலவு செய்வதற்கு தயாராக இருந்தால்தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையை, திராவிடக் கட்சிகள் ஏற்படுத்தியுள்ளது என குற்றம் சாட்டினார். இதனால், எளிய மக்கள் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளதாகக் கூறினார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பேரணி- பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்- இளம்பெண் கைது…

naveen santhakumar

திமுக தான் பாஜகவின் B-டீம்; பழ.கருப்பையா குற்றசாட்டு !

News Editor

‘டிக் டாக் புகழ்’ சோனாலி போகத் மாரடைப்பால் மரணம்..

Shanthi