இந்தியா

புதுச்சேரியில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை; ஆளுநர் அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுச்சேரி சுகாதாரத்துறைக்கு செயற்கை சுவாச கருவிகள் வழங்கும் நிகழ்வு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு 2 செயற்கை சுவாச கருவிகளை சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிமன்ற அறிவுறுத்தலின் படி தற்போது உள்ள கட்டுப்பாடுகள் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கலாம் என்றும், மற்ற கடைகள் திறக்க கூடாது என்று கூறினார். மேலும் எந்தெந்த கடைகள் திறக்க கூடாது என அரசு தெளிவாகக் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த இரண்டு நாட்களாக என்ன கட்டுப்பாடுகள் உள்ளதோ அதே கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும். சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனத்தினர் பொதுமக்களுக்கு கொரோனா காலத்தில் உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


பொதுமக்கள் அதிக கூட்டம் கூடுவதை தவிர்த்தாலே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் மக்களே தற்போது கட்டுப்பாடுகளுடன் உள்ளனர். கூட்டம் கூட வேண்டாம் என்பதற்காக தான் இந்த கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளதாகவும், முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பு இல்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்


Share
ALSO READ  செருப்பால் தாக்கப்பட்ட கர்ப்பிணி… குழந்தை இறந்த பரிதாபம்…
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை: மக்களை மீட்ட ராணுவ கர்னல், மேஜர் உள்பட 5 பேர் வீர மரணம்; தீவிரவாதிகள் சுட்டுக்கொலை….

naveen santhakumar

கொரோனா பரவலுக்கு மத்தியில் தாக்க இருக்கும் 13 புயல்கள் -IMD தகவல்…..

naveen santhakumar

தரமற்ற மருந்துகள் தயாரித்த போலி நிறுவனங்கள்

News Editor