தமிழகம்

ஸ்டெர்லைட் போராட்டம்; அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தூத்துக்குடியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தின் போது தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது தமிழக காவல்துறை சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதில் பொது மற்றும் தனியார் சொத்துகள் மீது சேதம் ஏற்படுத்தியதாக பதியப்பட்ட வழக்குகள் தவிர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் காரணமாக அரசியல் தலைவர்கள்மீது தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், நல்லக்கண்ணு, வைகோ, டி.டி.வி.தினகரன், பிரேமலதா விஜயகாந்த உள்ளிட்ட 13 அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் திரும்பபெறப்பட்டுள்ளது.

ALSO READ  5 பவுன் வரையிலான கூட்டுறவு நகைகடன் தள்ளுபடி...!!

சி.பி.ஐக்கு மாற்றப்பட்ட வழக்குகளை தவிர மீதமுள்ள 38 வாக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை நீட்டிப்பு

Admin

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி வழங்கிய ஆளுநர் !

News Editor

கள்ளக்குறிச்சி மரசிற்பத்துக்கு புவிசார் குறியீடு : தமிழக அரசு உத்தரவு

News Editor