உலகம்

கமலா ஹாரிஸ் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு – அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் கவுத்தமாலா மற்றும் மெக்சிகோ நாட்டிற்கு நேற்று மதியம் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். 

அவர் சென்ற விமானத்தில் புறப்பட்ட 30 நிமிடங்களில் திடீர் என்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதை சரி செய்ய விமானி முயற்சி செய்தார். என்றாலும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. எனவே கமலா ஹாரிஸ் சென்ற விமானம் மீண்டும் அதே விமான நிலையத்துக்கு திரும்பியது. அங்கேயே தரை இறக்கப்பட்டது.

பின்னர் அவர் வேறு ஒரு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து வேறு விமானத்தில் தனது பயணத்தை கமலா ஹாரிஸ் தொடர்ந்தார். அதில் அவர், திட்டமிட்டபடி கவுத்தமாலாவுக்கு சென்றடைந்தார். 

ALSO READ  நேபாளத்தின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பாவை நியமனம்- உச்ச நீதிமன்றம் அதிரடி


கொரோனா தாக்குதல் ஏற்பட்ட பிறகு, கவுத்தமாலா, மெக்சிகோ ஆகிய இடங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வு, நம்பிக்கை ஆகியவற்றை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்தார். இங்கு வாழ்வோர் பெரும்பாலும் புலம் பெயர்ந்தவர்கள்.

இங்கு ஆவணம் இல்லாமல் இருப்போருக்கு குடியேறுவற்கு தேவையான மூல காரணங்களை ஆய்வு செய்வதும் இவரது பயணத்தின் மற்றொரு நோக்கமாகும். இது புதிய அமெரிக்க அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.

ALSO READ  அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு உயரிய பதவி !

அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவி ஏற்ற பிறகு அரசு முறை பயணமாக அவர் செல்லும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆப்கனில் ஆபத்தான நிலையில் குழந்தைகள்- யுனிசெப்

naveen santhakumar

கொரோனா தொற்றால் ஐக்கிய அமீரகத்திற்கு விமான போக்குவரத்து தடை !

News Editor

ஆக்டோபசின் மரணப்பிடியில் சிக்கிய கழுகு – காப்பாற்றிய மீனவர்கள்

Admin