தமிழகம்

தமிழக அரசின் முதல் பட்ஜெட்; வரும் 13-ம் தேதி தாக்கல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி, செய்யப்படவுள்ளது.

இந்த மாதம் இறுதியில் தமிழக பட்ஜெட் தாக்கல்: துறை வாரியாக ஆய்வு பணிகள்  தீவிரம்

2021 – 2022ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெடை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

Palanivel Thiagarajan: Former banker looks to fix Tamil Nadu's finances |  Deccan Herald

கடந்த பிப்ரவரி மாதம், தேர்தலை முன்னிட்டு அதிமுக அரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்நிலையில், இதற்கு துறைரீதியான ஆய்வுக் கூட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டார்.

ALSO READ  அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்..

திமுக, அரசு பொறுப்பேற்ற பின்னர், அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வேளாண்மைக்கு முதன் முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித் துறை அலுவலர்களுடன், பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, இன்று காலை முதலமைச்சர் தலைமையில் தமிழக பட்ஜெட் தொடர்பான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

ALSO READ  ருபாய் 2,500 பொங்கல் பரிசை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு..!

அதில், நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடுவது குறித்தும், விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 13 தேதி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு முன்னதாக வெள்ளை அறிக்கையும் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சென்னை கோட்டூர்புரத்தில் 15 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் கைது

Admin

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன்..

Shanthi

நாடகக்காதலால் அரங்கேறிய சோகம்:

naveen santhakumar