தமிழகம் லைஃப் ஸ்டைல்

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் உட்பட 9 பயிற்சிப் பள்ளிகளின் பயிற்சி வகுப்புகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்து அப்பள்ளிகளில் பயிலவுள்ள மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி ஆணைகளை வழங்கினார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை, திருச்செந்தூர், பழநி, ஸ்ரீரங்கம்,சென்னை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் 151 மாணவர்களுடனும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் ஓதுவார் பயிற்சிப் பள்ளி, கும்பகோணம் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி, திருவில்லிப்புத்தூர் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் திவ்ய பிரபந்தப் பாடசாலை ஆகிய 3 பயிற்சிப் பள்ளிகளில் 46 மாணவர்களுடனும், பயிற்சி வகுப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  கொரோனா நிவாரண நிதி வழங்கிய சீமான், பாரதிராஜா…!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் ஒருவருக்கு புதிய வகை கொரோனா தொற்று..!

News Editor

அதிகரிக்கும் கொரோனா; சுகாதாரத்துறை செயலாளருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

News Editor

பாயின்ட் ஆப் சேல் கருவி பழுது- மக்கள் தவிப்பு..!

naveen santhakumar