தமிழகம்

பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் – சுகாதாரத்தறை வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

இந்திய மருத்துவ கவுன்சிலான (ஐ.சி.எம்.ஆர்) அறிவுறுத்தியுள்ளபடி தமிழகத்தில் செப்,1ம் தேதி 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை திறக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு சுகாதாரத்தறை இன்று வெளியிட்டுள்ளது.

School reopening: TN education minister to hold meeting with chief  educational officers - Times of India

சுகாதாரத்தறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்

1) மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சானிடைசர் வழங்கப்பட வேண்டும்.

2) மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒரு குழு அமைத்து அல்லது சுகாதார பணியாளர்களின் உதவியுடன் கண்காணிக்க வேண்டும்.

3) கொரானா தொற்று அறிகுறியுடன் கூடிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள்ளேயே அனுமதிக் கூடாது.

4) நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய விட்டமின் மாத்திரைகளை வழங்க வேண்டும்.

ALSO READ  பேரவை வரலாற்றிலேயே முதல் முறை… கெத்து காட்டும் ஸ்டாலின்!

5) பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்.

6) வகுப்பில் 50 சதவீத மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

7)ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார கண்காணிப்பாளர் நியமிக்கப்படுவர்கள்.

8) பள்ளி வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாகும். கை கழுவும் வசதிகள் போதுமான வகையில் செய்திருக்க வேண்டும்.

9) பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜைகள், பொருட்கள், பள்ளி கழிவறைகள், லேப்கள், நூலகங்கள் அனைத்தும் முறையாக சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ALSO READ  தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமனம் !

10) மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும். மாணவர்களுக்கு குறைந்தது 6 அடி இடைவெளியுடன் கூடிய இருக்கைகள் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

11) ஒரு நேரத்தில் 50 சதவீத மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், சுழற்சி அடிப்படையில் பாடம் எடுக்கும் விதமாக கால அட்டவணையை தயாரிக்க அறிவுறுப்படுகிறது.

12) இரு ஷிப்ட்களாக பிரித்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கலாம்.

13) வகுப்பறை சிறிதாக இருக்கும்பட்சத்தில், கம்ப்யூட்டர் அறை, நூலகம், லேப் போன்ற பரந்த இடங்களில் மாணவர்களை அமர வைத்து பாடம் நடத்தலாம்.

மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுகாதாரத்தறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரேஷன் கார்டு புதிய வசதி – தமிழக அரசு அறிவிப்பு

naveen santhakumar

‘மாவீரன் பிரபாகரனின்’ முதல் பிறந்தநாள்

Admin

மைக்செட் தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி !   

News Editor