உலகம்

இனிமேலும் பொறுக்க முடியாது- தாலிபான்களை எதிர்த்து களமிறங்கிய பெண்கள்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எங்களது எந்த உரிமையையும் பறிக்கக்கூடாது என்று கூறி தாலிபான்களை எதிர்த்து ஆப்கான் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

Female Afghan Journalists Continue Reporting Amid Uncertainty of Taliban  Rule

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயத்தில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் ஆப்கானில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். எங்களுடைய ஆட்சியில் பெண்களுடைய உரிமை பாதுகாக்கப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஷரியத் சட்டப்படி உரிமைகள் வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான அடக்கு முறையில் நாங்கள் ஈடுபட மாட்டோம் என்று தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ALSO READ  2021-ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

ஆனால் தலிபான்களின் இருண்டகால வரலாற்றை அறிந்தவர்கள் என்பதால் தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் வசம் சென்றிருப்பதால் என்னவெல்லாம் செய்வார்களோ என பெண்கள் பீதியில் இறுகின்றனர்.

இதனால் ஆங்காங்கு போராட்டங்கள் வெடித்துள்ளது. இதில், தாலிபான்களுக்கு மத்தியில் 4 பெண்கள் வீதியில் களமிறங்கி போராடியது அந்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ALSO READ  தொடரும் கொடூரம்..6 வார குழந்தையை பலி வாங்கிய கொரோனா வைரஸ்..

எனினும் அந்தப் பெண்கள் போராடிய போது தாலிபான்கள் போராட்டத்தை தடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் அங்கு போராடிய பெண்களின் குடியிருப்புகளை அடையாளப்படுத்தி விட்டு தாலிபான்கள் அங்கிருந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸால் பூமிக்கு விளைந்த நன்மை….

naveen santhakumar

தாய்லாந்தில் அறிமுகமாகும் ஹோண்டா சிட்டி கார்

Admin

சிறை ஜோடிக்கு திருமணம் செய்ய அனுமதியா?

Admin