தமிழகம்

வேலூரில் மீண்டும் நில அதிர்வு… மீளா அச்சத்தில் மக்கள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3வது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை ஊராட்சி மூலக்கொல்லை, மாரியம்மன்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் 19 மற்றும் 25ம் தேதி இரவு நேரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் நவம்பர் மாதம் 29ம் தேதி அதிகாலையில் தட்டப்பாறை ஊராட்சி மீனூர் கொல்லிமேடு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடந்த நவம்பர் 23ம் தேதி வேலூருக்கு 50 கிலோ மீட்டர் வடமேற்கில் உள்ள பகுதியில் சற்று நேரத்திற்கு முன்பு நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆந்திரா – சித்தூர் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதால், மக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினார். ரிக்டர் அளவு கோலில் 3.5 ஆக பதிவானது.

ALSO READ  திருச்சியில் மருத்துவர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளி... புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி வழக்கு பதிவு...

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டின் பிரதான பகுதியான பஜாரில் சரியாக காலை 9.41 மணி அளவில் அடுத்தடுத்து இரண்டு முறை லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு அவசரகதியில் வெளியேறி நெருக்களிலும், மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர். அடுத்தடுத்து நில அதிர்வு உணரப்படுவதால் வேலூர் மாவட்ட மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்துள்ளோம் – மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

News Editor

3 பேருடன் திருமணம்…கையில் குழந்தை…யார் தான் அப்பா?

Admin

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

naveen santhakumar