ஜோதிடம்

மளிகைக் கடைக்குச் சென்ற மகன் மருமகளோடு திரும்பி வந்ததால் தாய் அதிர்ச்சி…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காஸியாபாத் (Ghaziabad):-

கொரோனா வைரஸை விட கொரோனா பரவலை கட்டுப்படுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காலத்தில் அதிக விரோதங்களும் விசித்திரங்களும் நடந்து வருகிறது.

அதன்படி உத்தர பிரதேச மாநிலம் ஷஹிபாபாத் (Sahibabad) மாவட்டத்தில் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற மகன் பெண் ஒருவரை அழைத்து வந்து இவள் தான் உன் மருமகள் என்று தாய்க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷஹிபாபாத் மாவட்ட போலீசாருக்கு ஆச்சரியமான புகார் ஒன்று வந்தது. தாயொருவர் கண்களில் கண்ணீரோடு போலீசாரிடம் அளித்த புகாரில் நான் எனது மகனை மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க அனுப்பி இருந்தேன். ஆனால் அவன் திரும்பி வந்தபோது ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து இதுதான் உன் மருமகள் என்று கூறுகிறான் என்று புகார் அளித்தார்.

courtesy.

இதுகுறித்து கண்ணீரோடு விவரித்த அந்த தாயார்:-

ALSO READ  3வது அலையா??- உ.பி.ல் மர்ம காய்ச்சல் 40க்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு…!

நான் எனது மகனை இன்று மளிகை கடைக்கும் பொருட்கள் வாங்க தான் அனுப்பினேன் திடீரென்று வீட்டுக்கு வந்த அவன் ஒரு பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து இதுதான் என் மனைவி உன் மருமகள் என்றான். என்னால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.

இதுகுறித்து அந்தத் தாயின் மகன் குட்டு (Guddu) (26) கூறுகையில்:-

நான் எனது மனைவி சவித்தாவை இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஹரித்வாரில் உள்ள ஆரிய சமாஜ் மந்திரில் வைத்து திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அப்பொழுது போதுமான சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் என்னால் திருமண சான்றிதழ் வாங்க இயலவில்லை. பின்னர் எவ்வாறு அது திருமணம் சான்றிதழ் வாங்கிவிட வேண்டுமென்று ஹரித்வார் செல்ல முடிவெடுத்தேன். ஆனால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டால் என்னால் ஹரித்வார் சென்று திருமணச் சான்றிதழே வாங்க இயலவில்லை. இதையடுத்து எனது மனைவி சரிதாவை டெல்லியில் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து தங்க வைத்தேன். இந்நிலையில் மனைவியை வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்தேன். அதனால் எனது வீட்டுக்கு மனைவியை அழைத்து வந்து விட்டேன் என்றார்.

ALSO READ  திரையுலகில் டிரெண்டாகும் Real Man Challenge ...! அசத்தும் திரைப் பிரபலங்கள்....

போலீசார் குட்டுவின் தாயாரை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். ஆனால் குட்டுவின் தயார் சமாதானம் அடையவில்லை.

இதையடுத்து வழக்கு ஏதும் பதிவு செய்யாத போலீசார் டெல்லியில் சவிதா தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு விஷயத்தை விளக்கி கூறி லாக்டவுன் முடியும் வரை அந்த வீட்டிலேயே தம்பதிகள் இருவரையும் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

மளிகை கடைக்கு போயிட்டு வந்த கேப்பில் மனைவியோடு அந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விசாரணை கைதிகளை போலீஸ் ஸ்டேசன் அழைத்து செல்ல தடை- டிஜிபி திரிபாதி…

naveen santhakumar

திருப்பதி ஏழுமலையானை எவ்வாறு அழைக்க வேண்டும் தெரியுமா??? 

naveen santhakumar

விதியை மதியால் வெல்லலாம் எப்படி?

naveen santhakumar