சினிமா

வைல்ட் கர்நாடகா என்னும் முக்கிய ஆவணம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வைல்ட் கர்நாடகா தற்போது இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் மிக முக்கியமான ஆவணப்படமாக அமைந்துள்ளது.கர்நாடகாவின் எழில் கொஞ்சும் இயற்கையில் வாழும் பறவைகள், விலங்குகள், நில அமைப்புகள், மற்றும் கடற்கரைகளை கொண்டாடும் ஆவணப்படமாக வைல்ட் கர்நாடகா அமைந்திருக்கிறது. புகழ் பெற்ற இயற்கையாளர் மற்றும் வர்ணனையாளருமான சர் டேவிட் ஆட்டன்பரோ இந்த ஆவணப்படத்தினை எழுதியுள்ளார்.

ஒவ்வொரு காலநிலையிலும் காட்டு விலங்குகளின் பழக்க வழக்கங்கள், வாழ்வியல் முறைகள், உணவுக்காகவும், வேட்டைக்காகவும் விலங்குகள் ஒன்றையொன்று எப்படி சார்ந்துள்ளது என்பதை இந்த படம் விளக்குகிறது.

கருநாகம் மட்டுமில்லாமல், யானைகள், புலிகள், சிறுத்தைகள், கரடுகளில் வாழும் காட்டுப்பூனைகள், ஓநாய்கள், கரடிகள், மயில்கள் என அனைத்து உயிரினங்களையும் அணு அணுவாக ரசித்து படத்தினை இயக்கியுள்ளனர்.

ALSO READ  'ருத்ர தாண்டவம்' படக்குழுவினரை சந்தித்து வாக்கு சேகரித்த அதிமுக அமைச்சர் !

கர்நாடகாவைச் சேர்ந்த அமோகாவர்ஷா, கல்யாண் வர்மா, சரத் சம்பாத்தி, விஜய் மோகன் ராஜ் ஆகியோர் இயக்கியுள்ளனர். கர்நாடக வனத்துறை இந்த படத்தினை வழங்கியுள்ளது.
இந்த படம் கர்நாடகாவின் வனவியலை மட்டும் அல்லாது இயற்கை அரணை பாதுகாக்கும் கடமை குறித்தும் உணர்த்தி செல்கிறது.

Still from the film.

 20 புகைப்படக் கலைஞர்கள், 400 மணி நேர வனக்காட்சிகள், 20 ஆயிரம் மணி நேர ஆராய்ச்சியாக மொத்த கர்நாடக இயற்கை சூழலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படம் 53 நிமிடங்கள் மட்டுமே. பி.வி.ஆர் திரையரங்குகளில் மட்டும் இந்த படம் காட்சிப்படுத்தப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை அதுல்யாவின் பிறந்தநாள் புகைப்படங்கள்..எவ்ளோ அழகு.

News Editor

வைரலாகும் M.S.பாஸ்கர் அறிமுகமான முதல் படத்தின் புகைபடம்.. எந்த படம் தெரியுமா???

naveen santhakumar

சமுத்திரக்கனியுடன் ஜோடி சேரும் வனிதா விஜயகுமார் !

News Editor