சினிமா

‘விஜய்’யின் மாஸ்டர் படத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ள தனுஷ்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாவதால் தயவு செய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படத்தை திரையரங்கில்  பாருங்கள்” என்று நடிகர் தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். 

அதனைதொடரந்து படத்தின் முழு பணிகளும் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். பின்னர் கொரோனா நெருக்கடி   காரணங்களால் தீபாவளிக்கு வெளியிடததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  இதனை தொடர்ந்து, மாஸ்டர் படத்தின்   ட்ரைலர் ஆங்கில புத்தாண்டுக்கு வெளியாகும் என்றும்,  படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியது. அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து மாஸ்டர் படத்தினை பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு  அறிவித்துள்ளது.

ALSO READ  விக்ரம், த்ருவ் விக்ரம் நடிக்கும் "சீயான் 60" படப்பிடிப்பு தொடக்கம் !

இந்நிலையில், நடிகர் தனுஷ் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்பகிர்ந்துள்ளார்.அதில், ”விஜய் சாரின் மாஸ்டர் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாவது சினிமா காதலர்களுக்கு ஒரு சிறந்த செய்தி. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் திரைப்படங்களைப் பார்ப்பது தியேட்டர் கலாசாரத்தை மீண்டும் வளர்க்க உதவும் என்று நம்புகிறேன். தியேட்டர் அனுபவம்போல வேறு எதுவும் இல்லை. தயவு செய்து அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படத்தை தியேட்டர்களில் பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

#master #vijay #mastertamilmovie #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

திடீரென்று இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நடிகை அமலாபால்…..

naveen santhakumar

‘புதிய மாற்றங்கள் வரட்டும்’ பினராயிக்கு மோகன் லால் வாழ்த்து !

News Editor

Beast Modeல் – லேடி சிங்கம் Pooja Hegde..!

naveen santhakumar