சினிமா

சுந்தரா ட்ராவல்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு கதாபாத்திரத்தில் 2 நடிகர்களா ?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் அசோகன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ .

நகைச்சுவையை மையமாக கொண்ட இப்படத்தில் முரளி, வடிவேலு, ராதா, வினுச்சக்ரவர்த்தி, மணிவண்ணன் முரளி, பலர் நடித்திருந்தனர்.

Sundhara Travels (2002) - IMDb

இந்த படத்தில் ஒரு ஓட்டை பஸ்ஸை வைத்து தான் முழு படமும் எடுக்கப்பட்டு இருந்தது. மேலும், இந்த படத்தில் எலி ஒன்றும் முக்கிய கதாபாத்திரமாக இருந்தது.

ALSO READ  குட்நியூஸ்… வீடு திரும்பினார் வடிவேலு!

சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்த முரளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காலமாகிவிட்டார். அதேபோல இந்த படத்தில் முக்கிய தூணான வடிவேலுவும் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது, அதனால் இந்த படத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்து இருந்த நிலையில் தற்போது இந்த படத்தில் முரளி மற்றும் வடிவேலுவின் கதாபாத்திரத்தில் படத்தில் காமெடி நடிகர்களான யோகிபாபு மற்றும் கருணாகரன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ALSO READ  மீண்டும் ரிலீஸில் தள்ளிபோகிறதா டாக்டர் திரைப்படம் !
Yogi Babu and Karunakaran join again! - Tamil News - IndiaGlitz.com

சுந்தரா ட்ராவல்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக உள்ளது, அதனால் நல்ல படத்த கெடுக்காம இருந்தா சரி என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தீபாவளிக்கு ‛மாநாடு’ ரிலீஸ் – அண்ணாத்த உடன் மோதும் சிம்புவின் மாநாடு!

News Editor

நடிகர் அதர்வா-க்கு திருமணமா??????

naveen santhakumar

சௌமித்ரா சாட்டர்ஜி கொரோனாவால் உயிரிழந்தார் :

naveen santhakumar