தொழில்நுட்பம்

திவாலாகுமா ட்விட்டர்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

“இனி எந்த ஊழியருக்கும் வீட்டிலிருந்து பணி புரியும் சலுகை இல்லை எனவும், இதெற்கெல்லாம் ஒப்புக் கொண்டால் வேலைக்கு வரலாம் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை சில நாட்களுக்கு முன்பு தன் வசப்படுத்தி உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவருடைய சமீபத்திய அறிவிப்பால் ட்விட்டரில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், இனி ட்விட்டர் ஊழியர்கள் வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்றும் அலுவலகத்தில் இலவசமாக உணவு போன்ற எந்த ஒரு சலுகையும் வழங்கப்படாது என்றும் பெருந்தொற்று காலமெல்லாம் முடிந்துவிட்டது. அதனால், இனி எந்த ஊழியருக்கும் வீட்டிலிருந்து பணி புரியும் சலுகை இல்லவே இல்லை எனவும் இதெற்கெல்லாம் ஒப்புக் கொண்டால் வேலைக்கு வரலாம். இல்லாவிட்டால் வீட்டிலேயே இருக்கலாம் எனவும் ராஜினாமாக்களை நாங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வோம் என்றும் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில் இந்நிறுவனத்தில் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில், சுமார் 3,700 பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இந்தியாவில் மட்டும் 200 பேர் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த வாரம் 180க்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 70 சதவீதம் வரை தயாரிப்பு மற்றும் பொறியியல் குழுவில் வேலை செய்து வந்தவர்கள். மேலும் எஞ்சியிருக்கும் ஊழியர்களை நேரில் சந்தித்த எலான் மஸ்க், முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து வெளியேறிவரும் சூழலில் விரைவில் டுவிட்டர் திவாலாகும் வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  வெரிஃபிகேஷனை தொடங்கியது ட்விட்டர் வலைதளம் :
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவில் போக்கோ M3 ஸ்மார்ட்போனின் விலையுயர்வு :

Shobika

ராக்கெட்டில் பயணிக்கும் வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்கும் ஸ்பேஸ் எக்ஸ் சோதனை வெற்றி

Admin

சேவை கட்டணத்தை உயர்த்தும் BSNL நிறுவனம்

Admin