சினிமா

கொரோனா எதிரொலி; ரிலீஸில் தள்ளிப்போகும் கே.ஜி.எஃப் 2 !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 கே.ஜி.எஃப் திரைப்படம் தமிழில் வெளியானது. அதன் பின்  இந்த  படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2  படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது, மேலும் இதில் சஞ்சய் தத், பிரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

ALSO READ  கோவையை மிரட்டும் கொரோனா !

கடந்த சில மாதங்களுக்கு முன்பே கே.ஜி.எஃப் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால் வரும் ஜூலை 16 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் 2 ஆம் அலை தீவிரமாக பரவி வருவதால் பொது மக்களின் நலன் கருதி கே.ஜி.எஃப் 2 படத்தின் வெளியிட்டு தேதி தள்ளிவைக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“பூமி” படத்தின் டிரைலர் வெளியீடு..!

News Editor

மொட்டை அடித்து ஷாக் தந்த தலைநகரம் பட நடிகை ஜோதிர்மயி…

naveen santhakumar

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட குறும்படம் :

naveen santhakumar