தமிழகம்

பி.எஸ்.பி.பி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் மாணவிகளிடம்  பொருளியல் ஆசிரியர் ராஜ கோபாலன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், அப்பள்ளியின் முதல்வருக்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் பள்ளி நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்தது. 

ஆசிரியரின் இந்த செயலுக்கும், அவர் மீதியுள்ள புகாரை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் எம். பி கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கண்டனங்களை எழுப்பி வந்தனர்.  

ALSO READ  'பாரிஸ் ஜெயராஜ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதனையடுத்து பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் பத்மா சேஷாத்ரி ஆசிரியர் ராஜ கோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து முதனமை கல்வி அலுவலர் அனிதா பத்மா சேஷாத்ரி பள்ளி முதல்வர், தாளாளர் இருவரிடமும் தொலைபேசி மூலம் விசாரணை நடத்தினர்.

பின்பு உரிய விளக்கம் அளிக்க பள்ளிக்கு நோட்டீசிஸ் அனுப்பியுள்ளார். பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகம் விளக்கமளித்த பிறகு இயக்குநருக்கு அறிக்கை அனுப்பப்படும் எனக் கூறியுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாஜகவில் இணைந்தார், திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்… 

naveen santhakumar

திமுக ஆட்சி குறித்து ஆறு மாதத்திற்கு பின்பு தான் பேச முடியும் – அண்ணாமலை

News Editor

நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை வெளியீடு..!

Admin