சினிமா

திருமணம் குறித்து நடிகை சுனைனா பேட்டி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2008ஆம் ஆண்டு இயக்குனர் பி.வி பிரசாத் இயக்கத்தில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் சுனைனா இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது மேலும் இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து நடிகை சுனைனா நீர்ப்பறவை, வம்சம், சில்லு கருப்பட்டி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘ட்ரிப்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ், தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சுனைனா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன, பலவகையான கதாபாத்திரங்கள் கிடைத்துள்ளன, சில இயக்குனர்கள் என்னை மனதில் வைத்து கதைகளை எழுதி வருவது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது என்றார், மேலும் சமூக வலைதளங்களில் என் திருமணம் குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் தற்போது எனக்கு திருமணம் செய்து கொள்ளும்  எண்ணம் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 

ALSO READ  அதர்வாவின் சகோதரர் கதாநாயகனாக அறிமுகம் !

#Cinema #CineUpdate #TamilThisai #Tamilcinema #Tamilmovie #kollywood #sunainaa #cinematrending


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘கோடியில் ஒருவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

News Editor

தீபாவளிக்கு மாநாடு ரிலீஸ் இல்லை! தயாரிப்பாளர் அறிவிப்பு!

naveen santhakumar

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்…

naveen santhakumar