சினிமா

பழம்பெரும் இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

பிரபல மூத்த இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன்(91) இன்று காலை 8.45 மணி அளவில் மாரடைப்பினால் காலமானார். 

இவர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மீண்டும் கோகிலா, எல்லாம் இன்பமயம், கல்யாணராமன், கடல் மீன்கள், மகராசன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன். 

ALSO READ  செல்போன் வெடித்து மாணவர் உயிரிழப்பு - கோவையில் பயங்கரம்

இது தவிர ‘முத்து எங்கள் சொத்து’, ‘அடுத்தாத்து ஆல்பர்ட்’, ‘மனக்கணக்கு’, ‘பல்லவி மீண்டும் பல்லவி’ போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

இவருக்கு சக்குபாய் என்ற மனைவியும், குமாரவேலன் என்ற மகனும், பரமேஸ்வரி என்ற மகளும் உள்ளனர்.

மகன் ஜி.என்.ஆர்.குமாரவேலனும் பிரபல இயக்குனர் ஆவார். இவர் நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா போன்ற படங்களை இயக்கி உள்ளார். 

ALSO READ  ஷாருக்கானை தடுத்து நிறுத்திய சுங்கத்துறை அதிகாரிகள்?


தற்போது அருண் விஜய்யை வைத்து சினம் என்ற படத்தை இயக்கி உள்ளார். மறைந்த ஜி.என்.ரங்கராஜன் இறுதிச்சடங்கு சென்னை, நுங்கம்பாக்கம் மயானத்தில் நடைபெறுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரியோ, ரம்யா நம்பீசன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !    

News Editor

மாஸ் கெட்டப்பில் மிரட்டும் விஜய் சேதுபதி..!

News Editor

சர்ச்சையை கிளப்பும் ஃபேமிலி மேன் 2 தொடர்; விளக்கமளித்த சமந்தா !

News Editor