சினிமா

உலக சாதனை படைத்த “கே.ஜி.எப் 2” டீசர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 கே.ஜி.எப் திரைப்படம் தமிழில் வெளியானது. அதன் பின்  இந்த  படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2  படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது, மேலும் இதில் சஞ்சய் தத், பிரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.


கொரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.கே.ஜி.எப் 2  படத்தின் பர்ஸ்ட் லுக் முன்னரே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

அதனையடுத்து ஜனவரி மாதம் யாஷ் பிறந்தநாள் அன்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அனல் பறக்கும் இப்படத்தின் டீசர் தொடர்ந்து பல்வேறு சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது உலக அளவில் அதிகம் பேர் பார்த்த டீசர் என்கிற பெருமையை பெற்றுள்ளது. தற்போது இந்த டீசரை 175 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதற்கு முன், கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த முலன் படத்தின் டீசர் 175 மில்லியன் பார்வைகளைப் பெற்றதுதான் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை கேஜிஎப் 2 டீசர் முறியடித்துள்ளது.


Share
ALSO READ  'அஜித்' பட ஸ்டெயிலை பின்பற்றும் விஜய் ஆண்டனி !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று !

News Editor

‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் அடுத்த போஸ்டர் வெளியீடு !

News Editor

ஜான்வி கபூரின் HoT LooK புகைப்படங்கள்

Admin