தமிழகம்

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நில அதிர்வு; பீதியில் நெல்லை மக்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நெல்லை மாவட்டம் கடற்கரை, கிராமங்களான, கூடன்குளம், கூட்டபுளி ,பெருமணல், பஞ்சல், மற்றும் வள்ளியூர் , பணகுடி பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. 5 விநாடிகள் நீடித்த நில அதிர்வால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியில் வந்தனர் . நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை நிலநடுக்கம் என்பது ஏற்படாத பகுதியாகும். ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.  

இந்நிலையில் நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமங்களான கூடங்குளம்,  இடிந்தகரை, பெருமணல், பஞ்சல் உள்ளிட்ட மீனவ கிராமங்களிலும் வள்ளியூர் வடக்கன்குளம் கள்ளிகுளம், பணகுடி உள்ளிட்ட பல்வேறு நகர் பகுதிகளிலும் இன்று மாலை 3.38 மணி அளவில் லேசான நில அதிர்வு  உணரப்பட்டது சுமார் ஐந்து வினாடிகள் உணரப்பட்ட இந்த நில அதிர்வால் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படாத போதும் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீட்டை விட்டு வெளியே வந்த வீதியில் நின்றனர். நில அதிர்வு குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம்  தரப்பில் கூறும்போது மிக லேசான அதிர்வு உணரப்பட்டதால் அணு உலைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்றும் பாதுகாப்பான முறையில் மின்னுற்பத்தி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் அணுமின் நிலையத்தில் உள்ள ரிக்டர் அளவு கோலில் எந்தவிதமான பதிவு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
ALSO READ  கொரோனா தடுப்பூசிக்கு ஆதார் கட்டாயமில்லை !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதிய நேர அட்டவணை வெளியீடு- ரயில்களின் நேரம் மாற்றம்- தெற்கு ரயில்வே…!

naveen santhakumar

நான் அரசியலில் ஈடுபடமாட்டேன் : தமிழருவி மணியன் அறிக்கை..!

News Editor

மதுபிரியர்களுக்கு மகத்தான அறிவிப்பு: மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் செயல்படும்

naveen santhakumar